தமிழகத்தில் எகிறிய கொரோனா! ஜூலை 31 க்கு பிறகும் முழு முடக்கம்! வெளியான அறிவிப்பு!  - Seithipunal
Seithipunal


இன்று தமிழகத்தில் மட்டும் 6745 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள  நிலையில் அதிகபட்சமாக சென்னை எடுத்து விருதுநகர் மாவட்டத்தில் 424 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று மட்டும் அந்த மாவட்டத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்த நிலையில் அந்த மாவட்டத்தில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் முழு முடக்கத்திற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தளர்வுகளின்றி முழு முடக்கம் அறிவிக்கப்படுவதாக துணை ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

வருகின்ற 26 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2ம் தேதி வரை ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் வரும் 28 கிராமங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தளர்வுகளின்றி முழு முடக்கம் அமலில் இருக்கும் என துணை ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

மேலும் மருந்து, பால், மருத்துவமனை போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

LOckdown extent to august 2 in srivilliputur taluk


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->