BigBreaking : தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி சற்றுமுன் வெளியானது.! இரண்டு கட்டமாக தேர்தல்.! - Seithipunal
Seithipunal


விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இதுவரை நடத்தப்படாமல் உள்ளது. 

மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதன் காரணமாக இந்த மாவட்டங்களில் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. இது சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், 'வரும் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் இந்த மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்; என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதனையடுத்து, விடுபட்ட இந்த ஒன்பது மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தனது பணிகளை மேற்கொண்டு வருகிறது. அண்மையில் மாநில தேர்தல் ஆணையத்தின் தலைமை அலுவலகத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர். 

இந்நிலையில், 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் தேதியை சற்றுமுன் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் செய்தியாளர்களை சந்தித்து அறிவித்துள்ளார்.

இந்த ௯ மாவட்டங்களுக்கும் இருந்து கட்டங்களாக தேர்தல் நடைபெறும். முதல் கட்டமாக 6.10.2021 ஆண்டும், 9.10.2021 ஆண்டு இரண்டாவது கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். 

இந்தத் தேர்தலுக்கான மனு தாக்கல் வருகின்ற 15ஆம் தேதியும், மனுத்தாக்கல் செய்ய இறுதியாக வருகின்ற 22ஆம் தேதியும், வேட்புமனு பரிசீலனை வருகின்ற இருபத்தி மூன்றாம் தேதியும், வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கு வருகின்ற 25 ஆம் தேதி கடைசி நாளாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகளை வருகின்ற அக்டோபர் மாதம் 12ஆம் தேதி எண்ணி, அன்றே முடிவுகள் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

local body election date announce 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->