சேலத்தில் கிராம சபை கூட்டத்தில் நுழைந்த LKG மாணவன்! மாவட்ட ஆட்சியரிடம் வைத்த கோரிக்கை!   - Seithipunal
Seithipunal


ஊராட்சிகளில் காலநிலை அவசரநிலை பிரகடனம் செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் LKG மாணவன் கோரிக்கை வைத்துள்ளார். 

புவிவெப்பம் அதிகரிப்பதால் உலகில் பெரும் வறட்சி, காட்டுத்தீ, பெரும் வெள்ளம் , அதிவேக புயல், தண்ணீர் தட்டுப்பாடு, புதிய புதிய நோய்கள், வன்முறை போன்ற பேரழிவுகள் அதிகரித்து உள்ளன.

இதைத்தடுத்து நிறுத்த உடனடியாக ஊராட்சி அமைப்புகள் காலநிலை அவசரநிலையை பிரகடனப்படுத்த வேண்டி பசுமைத்தாயகம் சார்பில் சேலம் மாவட்டம், வாழப்பாடி ஒன்றியம், நீர்முள்ளிக்குட்டை ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி மாட்ட ஆட்சிதலைவர் சி. அ.ராமன் அவர்களிடம் LKG மாணவன் ந.வெ.அமுதரசன் மனுகொடுத்தார் .

அதனைப் பெற்றுக்கொண்ட ஆட்சிதலைவர்  சி.அ.ராமன் LKG மாணவன் ந.வெ.அமுதரசனை பாராட்டி பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார். உடன் பசுமைத்தாயகம் மாநில துணைச் செயலாளர் நீ.பா.வெங்கடாசலம், பசுமைத்தாயகம் நிர்வாகிகள் பாலாஜி, பழனிமுத்து, பாஸ்கரன் .அருண்குமார் மற்றும் ஊர்பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

lkg student request in grama sabha to collector declare climate emergency


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->