குட்டியானைக்கு புட்டிபால் கொடுத்த வனத்துறையினர்..நெகிழ வைத்த புகைப்படம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், தாயிடமிருந்து பிரிந்து தவித்த 3 மாதம் மட்டுமே ஆன பெண் யானைக் குட்டியை வனத்துறையினர் மீட்டு பாலூட்டி பராமரித்து வருகிறார்.

நேற்றிரவு சத்தியமங்கலம் அருகே ஆசனூர் வனப்பகுதியில், சுமார் மூன்று மாதம் ஆன பெண் யானைக்குட்டி ஒன்று தாயைப்பிரிந்து தவித்துக் கொண்டிருந்தது. இதைக் கண்ட வனத்துறையினர் அதனை மீட்டு வன கால்நடை மருத்துவமையத்திற்கு கொண்டு வந்தனர். 

துரு துரு வென்று இருக்கும் அதனை பரிசோதித்த வனத்துறை மருத்துவர், யானக்குட்டி நல்ல உடல் நிலையில் ஆரோக்கியத்துடன் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தற்போது அதற்கு புட்டி பால் கொடுத்து பரமரித்து வருகிறார்கள். உயரதிகாரிகளின் ஆலோசனை பெற்று, யானைக்குட்டியை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு அனுப்புவது குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

little elephant in sathiyamangalm


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->