இளவட்டக்கல்லுடன் மல்லுக்கட்டிய குடிகாரன்... தலைகுப்பற விழுந்து புதையல் எடுத்த சோகம்.! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பணகுடி வடலிவிலை பகுதியில், ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இளைஞர் மன்றம் சார்பில் விளையாட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், பண்டையத் தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் வகையில், இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடைபெறுவது உண்டு. 

பல்வேறு வகை எடையை கொண்ட இளவட்டக்கல் இதற்காக தயார் செய்யப்பட்டு வைக்கப்படும் நிலையில், இந்த வருட பொங்கலுக்கு இளவட்டக்கல் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலையில், குடிமகன் ஒருவன் ஏக மதுபோதையில் அந்த பகுதியில் சுற்றி கொண்டிருந்துள்ளார். 

இதன் பின்னர், அந்த குடிமகன் அங்கு வைக்கப்பட்டிருந்த நடுகல் ஒன்று தூக்க பலமுறை முயன்றும், தலைகுப்புற விழுந்து மீசையில் மண் ஒட்டாதது தான் குறை என்ற போக்கில் செயல்பட்டது அப்பகுதி வாசிகளிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. 

இது ஒருபுறம் இருந்தாலும், குடிகாரனின் குறும்பு விளையாட்டு முடிந்ததும், ஆண்கள் மற்றும் பெண்கள், சிறுவர்கள் கலந்து கொண்டு தங்களின் உடல் வலிமை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த இளவட்டக்கல் போட்டியில் தங்கராஜ் என்பவர் 11 முறை இளவட்ட கல்லை தூக்கி, கழுத்தை சுற்றி முதல் பரிசை தட்டிச் சென்ற நிலையில், 45 கிலோ எடையுள்ள இளவட்ட கல்லை தூக்கி பத்மா என்ற பெண்மணியும் முதல் பரிசை தட்டிச் சென்றார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Liquor Drinker Culprit Makes Comedy during Pongal Celebration games weight Lifting


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->