ஏ.ஆர்.ரகுமான் ஸ்டுடியோவில் பரிதாபம்.! 40 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்த லைட்மேன் பலி.! - Seithipunal
Seithipunal


இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் ஸ்டூடியோவில் 40 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்த லைட்மேன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில், பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானுக்கு சொந்தமான ஏ.ஆர். பிலிம் சிட்டி என்ற பெயரில் ஸ்டூடியோ உள்ளது. இந்த ஸ்டூடியோவில் சத்யராஜ் நடிக்கும் 'வெப்பன்' படபிடிப்புக்காக செட் போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சாலிகிராமத்தைச் சேர்ந்த லைட்மேன் குமார் (47) என்பவர் இன்று காலை படபிடிப்புக்காக 40 அடி உயரத்தில் இருந்து மின் விளக்குகள் பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக திடீரென கால்தவறி கீழே விழுந்துள்ளார்.

இதையடுத்து உடனடியாக குமாரை விட்டு சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் குமார் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lightman died after falling from a height of 40 feet in AR Rahman studio in tiruvallur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->