சாலை ஓரத்தில் நின்ற சிறுத்தை...வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ..! - Seithipunal
Seithipunal


ஊட்டியை சுற்றி தொட்ட பெட்டா, கவர்னர்சோலை, கேர்ன்ஹில், உள்ளிட்ட அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் கரடி, காட்டெருமை, சிறுத்தை, கடமான் போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்புகளுக்கு நுழைந்து  வருகின்றது. 

இந்நிலையில் நேற்று ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலை பைக்காரா பகுதியில் சிறுத்தை ஒன்று நடமாடிய நிலையில், சிறுத்தை தொடர்ந்து சாலையை கடக்க முயற்சி செய்தது. அப்போது வாகனங்கள் வந்து கொண்டிருந்ததால், வாகனங்கள் செல்லும் வரை சாலையோரத்திலேயே நின்றது. இதைப்பார்த்து வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். 

சில வாகன ஓட்டிகள் சிறுத்தையை செல்போனில் வீடியோஎடுத்துக்கொண்டு சென்றனர். சாலையோரத்தில் நின்ற சிறுத்தை திடீரென வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. இந்த காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் சாலையில் நிற்கும் போது வாகனங்களை விட்டு கீழே இறங்கக்கூடாது. வனவிலங்குகள் அருகே செல்வதை தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Leopard standing on the side of the road


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->