உள்ளாட்சி தேர்தலையொட்டி விடுமுறையை அறிவித்து அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில், ஊரக உள்ளாட்சி அமைப்பு தேர்தல் நடைபெற இருக்கிறது, எனவே தேர்தல் நடக்கும் பகுதிகளில் வரும் 27, 30ம் தேதிகளில் பொது விடுமுறை விட வேண்டும் என்று தமிழக அரசுக்கு, மாநில தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளகுறிச்சி, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களை தவிர மீதமுள்ள 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 27, 30ம் தேதிகளில் தேர்தல் நடைபெற இருக்கிறது.

Image result for vote seithipunal

இந்த நிலையில், தமிழக அரசுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளர் எல். சுப்பிரமணியன் கடிதம் எழுதியிருக்கிறார். அதில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெரும் பகுதிகளில் வரும் 27, 30ம் தேதியன்று பொதுவிடுமுறை விட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவித்தது தமிழக அரசு.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் விடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

leave for local body election


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->