மதுரைக்கும், சிதம்பரத்திற்கும் நடுவில் வந்த திருப்பதி..! அட ஆமாங்க..!  - Seithipunal
Seithipunal


முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பிரசாதமாக லட்டு வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் இருக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உலக பிரசித்தி பெற்ற ஆன்மிக தலமாக இருக்கின்றது. பல மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபடுவது வழக்கம். நிலையில் அங்கு வரும் பக்தர்களுக்கு திருப்பதி கோவிலைப் போலவே லட்டு பிரசாதமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக லட்டு தயாரிக்கும் இயந்திரங்கள் வாங்கபட்டது. ஒரு மணி நேரத்தில் சுமார் 3000 நாட்கள் வரை தயார் செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டு இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில், இந்த திட்டத்தினை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் இருந்த படியே காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.

Image result for edapadi seithipunal

இதனை தொடர்ந்து கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு லட்டு விநியோகம் செய்யப்பட்டது. இந்த லட்டு தயாரிப்புக்காக 15 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தினமும் மீனாட்சியை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு இரண்டாம் பிரகாரத்தில் இலவச லட்டு வழங்கப்படும் என்று தகவல் கூறுகிறது.

பொதுவாக நம்முடைய வீட்டிற்கு நலம் விசாரிக்க வருபவர்கள் வீட்டில் சிதம்பரமா? மதுரையா? என்று கேட்பது வழக்கம். இதற்கு காரணம் மதுரை என்றால் மீனாட்சி, சிதம்பரம் என்றால் நடராஜர். எனவே வீட்டில் ஆண் ஆதிக்கம் செலுத்துகிறாரா? அல்லது பெண் ஆதிக்கம் செலுத்துகிறார்களா.? என்பதை தெரிந்துகொள்ள இப்படி ஒரு கேள்வி கேட்பது வழக்கம்.

எனவே சிதம்பரத்திற்கும், மதுரைக்கும் போட்டி இருந்த நிலையில், தற்போது திருப்பதிக்கும், லட்டு விவகாரத்தில் மதுரைக்கும் போட்டி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

laddu gives in madurai meenachi temple


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->