திராவிட மாடல் ஆட்சியில் ஆசிரியர் பற்றாக்குறை! ஒரே ஒரு ஆசிரியரை கொண்டு இயங்கும் தொடக்கப்பள்ளி! - Seithipunal
Seithipunal


டெல்லி மாடலை போல் ஸ்மார்ட் வகுப்புகள் என அறிவித்திருந்த திராவிட மாடல் ஆட்சியில் 90 மாணவர்களுக்கு ஒரே ஒரு ஆசிரியர் பணியாற்றும் அவலம்! 

கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியத்தில் கீரனூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட புதுவாடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 150 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வந்தனர். தலைமை ஆசிரியர் உட்பட மூன்று ஆசிரியர்கள் மட்டுமே இப்பள்ளியில் பணியாற்றி வந்த நிலையில் இரண்டு ஆசிரியர்கள் பணியிட மாற்றம் பெற்று வேறு பள்ளிக்கு சென்று விட்டனர். 

இதனால் இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் மட்டுமே பணியாற்றி வருகிறார். பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகளின் மாற்றுச் சான்றிதழை பெற்று வேறு பள்ளிகளில் சேர்த்துவிட்டனர். இப்பள்ளியில் 150 ஆக இருந்த மாணவ மாணவிகளின் எண்ணிக்கை 90 ஆக குறைந்துள்ளது. இந்தப் பள்ளிக்கு ஆசிரியர்களை நியமிக்க கோரி கடந்த ஒரு வருடமாக அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் புகார் மனு அளித்தும் எந்த பயனும் இல்லை என பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

 இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பள்ளியின் முன்பு குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்வி அறிவிற்கு அடித்தளமான தொடக்கப் பள்ளியில் ஆசிரியர் இல்லாததால் 90 மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

டெல்லி மாடல் போல் ஸ்மார்ட் வகுப்புகள் கொண்டு வரப்பட்டும் என சொல்லும் திராவிட மாடல் முதல்வர் ஸ்டாலின், ஆசிரியர்களை நியமித்து 90 மாணவர்களின் அடிப்படைக் கல்வியை காப்பாற்றுவாரா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lack of teachers in the Dravida model government


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->