கொரோனா சிகிச்சையில் தலைசிறந்து விளங்கும் தமிழகம்.. தாயகம் திரும்பியவர் பிரத்தியேக பேட்டி.!! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸின் தாக்கத்தால் மக்கள் கடுமையான அளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்களின் வாழ்வாதாரமும் கடுமையான அளவு பாதிக்கப்பட்டது. வெளிநாடுகளுக்கு பணிக்கு சென்ற பலரும் அங்கேயே சிக்கிக்கொள்ளும் சூழல் ஏற்பட்டது. இந்தியாவில் இருந்து வெளிநாடுகள் சென்ற இந்தியர்களை மீட்க "வந்தே பாரத்" திட்டம் துவங்கி, இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். பல நாடுகளில் சர்வதேச விமான தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், சிறப்பு மீட்பு நடவடிக்கைகளை அந்தந்த நாட்டு அரசுகள் மேற்கொண்டு வருகிறது. 

தமிழகத்தை பொறுத்த வரையில் வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க பிற மாநிலங்களை காட்டிலும் குறைந்தளவே விமான சேவை இயக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் கொரோனா உச்சக்கட்டம் காரணமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், மத்திய அரசிற்கு விமான சேவைகள் தமிழகத்திற்கு வேண்டாம் என்று கடிதம் எழுதியிருந்தார். 

வந்தே பாரத் திட்டத்தில் பிற நாடுகளில் உள்ள தமிழர்களை மீட்க குறைந்தளவு விமானங்கள் இயக்கப்பட்ட போதிலும், தமிழர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தாயகம் திரும்பிக்கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில், தாயகம் திரும்பிய நபரை நமது நிறுவனம் சார்பாக தொடர்பு கொண்டு விசாரிக்கையில், அவர் பல தகவல்களை தெரிவித்தார். 

" தமிழகத்தில் இருந்து குவைத்திருக்கு பணி காரணமாக சென்ற நான், கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கு காரணமாக அங்கேயே இருக்கும் சூழல் ஏற்பட்டது. கொரோனாவின் தாக்கம் என்னையும் விட்டுவைக்கவில்லை. குவைத்தில் ஊரடங்கு மூன்று கட்டமாக அமல்படுத்திய சூழலிலும், கொரோனா அறிகுறி இருந்தும் பி.சி.ஆர் எனப்படும் மருத்துவ சோதனையை செய்யவில்லை. 

கடந்த 18 நாட்களுக்கு முன்னதாகவே ஒரேநாளில் எனக்கு சுவை மற்றும் மனம் உணர இயலாதது போன்ற அறிகுறி ஏற்பட்டது. இதன்பின்னர் குவைத்தில் இருக்கும் பெரிய அரசு மருத்துவமனைக்கு சென்றேன். அங்கு எனக்கு பி.சி.ஆர். சோதனை செய்யப்படாமல், இரத்த அழுத்த சோதனை, இரத்தத்தில் உள்ள ஆக்சிஜனின் அளவு போன்ற சோதனைகள் செய்தனர். சோதனைகளுக்கு பின்னர் சுவை மற்றும் மனம் உணர்வை சரி செய்யவும், தொண்டை வறட்சி தன்மையை சரி செய்யவும் மாத்திரைகள் வழங்கினர். 

இதனை தவிர்த்து நானும் சுய முயற்சியில் வைட்டமின் மாத்திரைகள், உடலுக்கு சத்துக்களை ஏற்படுத்தும் மாத்திரைகள் போன்றவற்றை எடுத்துக்கொண்டேன். இதன்பின்னர் நான்கு நாட்களிலேயே எனக்கு கொரோனா சரியானது. இதன்பின்னர் அங்கிருந்து சென்னை வந்த சூழலில், தமிழக அரசு சார்பாக மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குறைந்தபட்ச கொரோனா அறிகுறிகள் இருந்தது. 

இதனையடுத்து அரசு சார்பாக தனிமைப்படுத்தபட்ட மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளேன். இங்கு அரசு அனைத்து வசதியையும் செய்துள்ளது. மருத்துவர்கள் தினமும் நேரில் வந்து கொரோனா அறிகுறி இருக்கிறதா? என்பதை சோதனை செய்து அதற்கு ஏற்றாற்போல சிகிச்சை அளித்து வருகின்றனர். அதிக கொரோனா அறிகுறி மற்றும் மூச்சுத்திணறல், கடுமையான வயிற்றுவலி போன்ற பிரச்சனை இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். 

நல்ல வேலையாக எனக்கு எந்த விதமான பெரியளவு பிரச்சனையும் இல்லை. உணவுகளை பொறுத்த வரையில் நேரத்திற்கு சத்தான சாப்பாடு, காலையில் இரண்டு மூலிகை சாறு, மதியம் இரண்டு மூலிகை சாறு போன்றவை தமிழக அரசு வழங்குகிறது. தமிழக அரசின் நடவடிக்கை மற்றும் அணுகுமுறை நல்ல விதமான முறையில் இருக்கிறது. குவைத்தில் உள்ள மருத்துவர்களின் அணுகுமுறைகளை பார்க்கையில், தமிழகம் சிறப்பாக இருக்கிறது. 

நான் குவைத்தில் இருந்து பணியாற்றிய நிறுவனத்தின் மூலமாகவே தாயகம் திருப்பியுள்ளேன். வந்தே பாரத் திட்டத்தின் கீழ் தாயகத்திற்கு செல்ல விரும்பும் தமிழர்களின் விபரத்தை கேட்டறிந்து அந்தந்த நிறுவனமே விடுதியில் தங்க வைத்து விமானங்களில் அனுப்பி வருகிறது.. இது ஓவ்வொரு நிறுவனத்தை பொருத்தும் மாறுபடும். பிற நிறுவனங்களில் எந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்பது குறித்த விபரம் தெரியாது " என்று தெரிவித்தார். 

எதோ ஒரு காரணத்திற்காக வெளிநாட்டிற்கு சென்று தாயகம் திரும்பும் நபர்கள் அனைவரும் பத்திரமாக அவர்களின் இல்லத்திற்கு செல்ல வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.. இந்த சூழலையும் நாம் பாதுகாப்புடன் கடந்து செல்லலாம். விலகியிருங்கள்.. வீட்டிலேயே இருங்கள்.. தனியாக இருங்கள்.. பாதுகாப்பாக இருங்கள்.. கொரோனா அறிகுறி இருந்தால் ஒருமுறை சோதனை செய்துகொள்ளுங்கள்.. முகக்கவசம் அணியுங்கள்.. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kuwait Return Tamil youngster explain about Kuwait and TN govt Process


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->