கும்பகோணம் ராமலிங்கம் கொலை வழக்கு, 1 லட்சம் பரிசு.! தேசிய புலனாய்வு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


கும்பகோணம் ராமலிங்கம் கொலை வழக்கு குற்றவாளிகள் குறித்து துப்பு கொடுப்பவருக்கு 1 லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என தேசிய புலனாய்வு அறிவித்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்  அருகே உள்ள திருபுவனத்தில், கடந்த பிப்ரவரி மாதம் ராமலிங்கம் என்பவர் மத மாற்றத்திற்கு எதிராக செயல்பட்டதாக கூறி 4 இஸ்லாமியர்கள்  ராமலிங்கத்தை வெட்டி படுகொலை செய்தனர். 

ராமலிங்கம் கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரணையை தமிழக காவல்துறையினர் நடத்தி வந்தது, இதையடுத்து இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு தன்வசம் எடுத்துக் கொண்டது. இதுவரை இந்த வழக்கில் ஏற்கனவே காவல்துறையினரால் 11 இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது 6 பேர் தேடப்படும் குற்றவாளிகள் என தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. 

மேலும், அந்த ஆறு குற்றவாளிகள் குறித்து, துப்பு கொடுப்பவர்களுக்கு தலா 1 லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என தேசிய புலனாய்வு அமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kumbakonam ramalingam muder case new announcement nia


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->