டாக்டர் ராமதாஸை சந்தித்த முக்கிய தலைவர்! உண்ணாவிரத போராட்டத்தில் டாக்டர் ராமதாஸ்!  - Seithipunal
Seithipunal


மதுவிலக்கு உண்ணாநிலையில் பங்கேற்க காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்ததையடுத்து மருத்துவர் ராமதாஸ் அதனை ஏற்றுக்கொண்டுள்ளார். 

"பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களை காந்தியவாதியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான  குமரி அனந்தன் இன்று சென்னையில் சந்தித்து பேசினார். அப்போது தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று  வலியுறுத்தி வரும் 15-ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொள்ளவிருப்பதாகவும், அந்தப் போராட்டத்தில் மருத்துவர் அய்யா அவர்கள் பங்கேற்று வாழ்த்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அதை ஏற்றுக்கொண்ட மருத்துவர் அய்யா அவர்கள் உண்ணாநிலை போராட்டத்தில் பங்கேற்று வாழ்த்த ஒப்புக்கொண்டார்." என பாமக தலைமைநிலைய செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாட்டாளி மக்கள் கட்சி ஆரம்பிக்கப்பட்டது முதல், அந்த கட்சி வலியுறுத்தி வரும் முக்கிய கொள்கைகளில் ஒன்றாக இருப்பது மது விலக்கு. இந்த மதுவிலக்கு உண்ணாவிரத போராட்டத்திற்கு டாக்டர் ராமதாஸ் வருகை தருவதாக கூறி இருப்பதில் வியப்பேதும் இல்லை. ஏனெனில் அவர் அதனை தமிழகத்தின் தேவையாக உணர்கிறார். இதன்மூலம் மீண்டும் மதுவிலக்கு என்ற கோரிக்கையானது தமிழ்நாட்டில் பெருகும் என்பது இதன் மூலம் உறுதியாகிறது. 

ஏற்கனவே பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய சட்ட போராட்டங்களின் மூலம், 3321 மதுக்கடைகள் தமிழகத்தில் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் பாமகவின் கோரிக்கைகைகளாலும், போராட்டங்களினாலும் டாஸ்மாக் இயங்கும் நேரத்தை குறைத்து, இயங்கும் கடைகளின் எண்ணிக்கையை குறைத்து தமிழக அரசு அவ்வப்போது அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kumari ananthan meets dr ramadoss


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->