அரசு பேருந்தாவது... ஏதாவது... பாஸ் இல்லனா நோ என்ட்ரி.. கறார் காட்டும் சுங்கச்சாவடி.!! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் கோட்டத்திற்கு சொந்தமான அரசு பேருந்து ஒன்று, திருவண்ணாமலையில் இருந்து பயணிகள் சிலருடன் கிருஷ்ணகிரிக்கு புறப்பட்டு சென்றது. இந்த பேருந்து கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியை கடக்க முயன்ற நேரத்தில், அரசு பேருந்து அதற்கு வழக்கமாக வழங்கப்படவேண்டிய சுங்கச்சாவடி பாஸ் இல்லை என்பதால் நிறுத்தப்பட்டது. 

மேலும், பேருந்தில் குறைந்தளவு பயணிகள் இருந்ததாலும், சுங்கச்சாவடி பாஷை நேரடியாக நடத்துனர் எடுக்கக்கூடாது என்பதாலும் ஓரமாக நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகளும், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தவித்த நிலையில், பணிமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து சுங்கச்சாவடி பாஷை வழங்கி மாற்று பேருந்து அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அப்பேருந்து மூலமாக பயணிகள் கிருஷ்ணகிரிக்கு புறப்பட்டு சென்றனர். திருவண்ணாமலையில் இருந்த புறப்பட்ட பேருந்து, வேறு வழியின்றி மீண்டும் திருவண்ணாமலைக்கே புறப்பட்டு சென்றது. 

இது குறித்து பேசிய விழுப்புரம் பணிமனை அதிகாரி, இனி வரும் நாட்களில் இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலை ஏற்படாது என்று உறுதியளித்துள்ளார். அரசு பேருந்துக்கு சுங்கச்சாவடியில் இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தியது பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும், பழுது காரணமாக மாற்று பேருந்து அனுப்பி வைத்தால் கூட பரவாயில்லை, சுங்கச்சாவடி பாஸ் இல்லாததால் மாற்று பேருந்தா? என்று பயணிகளும் விரக்தியில் செய்வதறியாது மற்றொரு பேருந்தில் புறப்பட்டு சென்றுள்ளனர். சுங்கச்சாவடிக்கே மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அரசு பேருந்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Krishnagiri Toll Gate TN Govt Bus Stooped by Toll gate employees


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->