தேர்வில் தோல்வி.. கிருஷ்ணகிரி மாணவன் எடுத்த விபரீத முடிவு.. கண்ணீரில் பெற்றோர்கள்.!! - Seithipunal
Seithipunal


பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடைபெற்று முடிந்த நிலையில், கொரோனா பரவல் பிரச்சனைக்கு மத்தியில் இன்று தேர்வு வெளியானது. இந்த தேர்வில் வழக்கம்போல மாணவிகள் அதிகளவு தேர்ச்சி அடைந்தனர். 

மேலும், மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில் முதல் மூன்று இடங்களை கொங்கு மண்டலமான திருப்பூர், ஈரோடு, கோவை பெற்றிருந்தது. பல மாணவர்களும் நல்ல மதிப்பெண் பெற்று மகிழ்ச்சியுடன் இருந்தனர். 

இந்நிலையில், தேர்வுகள் என்றால் மதிப்பெண்ணை வைத்து மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும், அதே மதிப்பெண்ணை வைத்து பல தற்கொலை சோகங்களும் நடைபெற்று வருகிறது. பர்கூரில் தேர்வில் தோல்வியுற்றதால் மாணவன் தூக்கிட்டு சோகம் அரங்கேறியுள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் அருகேயுள்ள தீர்த்தப்பட்டி கிராமத்தை சார்ந்த மாணவன் தமிழ்செல்வன் (வயது 17), 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதி உள்ளான். இன்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தேர்வில் தோல்வி அடைந்துள்ளான்.

இதனால் காலையில் இருந்தே சிறுவன் மனமுடைந்து காணப்பட்ட நிலையில், தமிழ்செல்வன் இல்லத்தில் ஆட்கள் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளான். மகனின் உடலை பெற்றோர்கள் தூக்கில் கண்டு அலறித்துடித்துள்ளனர். 

இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து, நிலைமையை சுதாரித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், தமிழ்ச்செல்வனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேர்வு மற்றும் மதிப்பெண்களுக்கு அப்பாற்பட்டு பல மனிதர்கள் பல  விதமான சாதனைகளை படைத்துள்ளனர். தேர்வு என்பது அப்போதைய காலகட்ட சூழ்நிலையை மட்டுமே வெளிப்படுத்துமே தவிர்த்து, நமது வாழ்க்கையை அது தீர்மானம் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. நமக்கான வாழ்க்கையை நாம் நல்ல வழியில் பயணம் செய்தால், அதுவே நல்லநிலைக்கு நம்மை கொண்டு செல்லும்.. தேர்வில் தோல்வி என்பது வாழ்க்கையிலேயே தோற்றதற்கான அர்த்தம் இல்லை.. வாழ்க்கை என்பது மிகவும் பெரியது.. அதில் சின்ன விஷயம் தான் தேர்வு.. கீழே விழுந்தால் தான் சைக்கிள் கற்றுக்கொள்ள இயலும் என்பதை மாணாக்கர்கள் நினைவில் கொள்ள வேண்டும். நமது திறமையே நம்மை உயர்த்தும்... 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Krishnagiri student suicide died failure HSC Exam


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->