எருது விடும் நிகழ்ச்சியில் சோகம்.. கனபொழுதில் இடிந்து தரைமட்டமான கட்டிடம்.. 2 பேர் பலி.. 20 பேர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


எருது விடும் விழாவில் கட்டிடம் இடிந்து விழுந்து சிறுமி மற்றும் முதியவர் பலியாகி, 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள சோகம் அரங்கேறியுள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நேரழகிரி பகுதியில் எருது விடும் விழா நடைபெற்றுள்ளது. இதன்போது அங்குள்ள புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தின் மாடியில் சுமார் 50 க்கும் மேற்பட்ட மக்கள் இருந்துள்ளனர். 

இந்நிலையில், எருது அப்பகுதியை கடந்து சென்ற சில மணித்துளிகளுக்கு உள்ளாகவே, கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. இதில், வீட்டின் மேற்கூரையில் இருந்த 50 பேரும் கீழே விழுந்துவிட, கட்டிடத்தில் இருந்த முதியவர், சிறுமி பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும், 20 க்கும் மேற்பட்டோருக்கு கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு படுகாயத்துடன் அலறித்துடித்துள்ளனர். இதனையடுத்து அங்கிருந்த மக்கள் விரைந்து செயல்பட்டு அனைவரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

இது குறித்த தகவலை அறிந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். வீடுகளின் மேற்கூரையில் அதிகளவு மக்கள் கூடியிருந்தது விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. கட்டிடத்தின் ஸ்திரத்தன்மையும் சந்தேகத்திற்கு உள்ளாகியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Krishnagiri Neelagiri Pongal Festival Building Collapsed 2 Death 20 injured


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->