திமுகவில் இருந்து விலகி பாமகவில் இணையும் வன்னியர்கள்.. கலங்கும் திமுக தலைமை.! - Seithipunal
Seithipunal


திமுகவில் இருந்து விலகி வன்னியர் சமுதாய மக்கள் திரளாக பாமகவில் இணையும் நிகழ்வு நடந்து வருகிறது.

நான் இந்துக்களுக்கு எதிரி இல்லை, எந்த சமுதாய பண்பாடுகளுக்கும்,  எதிரி இல்லை என்று தேர்தல் நேரத்தில் இந்துக்களுக்கு பட்டை நாமம் போட்டு காவடி எடுக்கும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், தேர்தல் முடிந்ததும் வெற்றியோ தோல்வியோ இந்து மக்களின் பண்பாடுகளை நேரடியாகவும், மறைமுகமாகவும் வசைபாடி வருகிறது. 

தற்போது, தமிழகத்தில் பெரும்பான்மை சமுதாயமாக வாழ்ந்து வரும் வன்னியர்களின் தனி உள் இட ஒதுக்கீடு பிரச்சனையிலும் இதே பாணியை திமுக அப்பட்டமாக கையாண்டது. திமுகவின் முக்கிய புள்ளிகள் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வரை பாமக தலைமையேற்று நடத்திய வன்னியர்களுக்கான போராட்டத்திற்கு எந்த விதமான ஆதரவோ அல்லது அரசுக்கு அறிக்கை மூலமாக கோரிக்கை கூட வைக்கவில்லை. 

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டதும், அது நாடகம், அதை நாங்கள் தான் நிறைவேற்ற வேண்டும் என்று உருட்டிக்கொண்டு இருக்க, இன்று காலை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முகத்தில் கரியை பூசும் விதமாக ஆளுநரின் ஒப்புதல் பெற்று வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதனால் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை நேரடியாகவும், மறைமுகமாகவும் எதிர்த்த பலருக்கும் சொல்லமுடியாத வயிற்றெரிச்சல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டத்தின் இறுதிக்கட்டத்தில் மாற்றுக்கட்சியில் உள்ள வன்னியர்களும் தங்களின் கட்சிக்கொடியுடன் போராட்டத்தில் கலந்துகொண்டனர். தற்போது, மாற்றுக்கட்சியில் உள்ள வன்னியர்கள் பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்து வருகின்றனர். அதன்படி, திமுகவின் தொண்டரணி மாவட்டச் செயலாளர் திரு.கோவிந்தன் தலைமையில் 20 வன்னியர்கள் திமுகவிலிருந்து விலகி முன்னாள் பாமக மாவட்ட தலைவரும் மூக்கண்டபள்ளி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் தொழிலதிபருமான திரு. ப.முனிராஜ் முன்னிலையில் தங்களை பாட்டாளி மக்கள் கட்சியில் இணைத்துக் கொண்டார்கள்.  

இனி பாமகவில் மருத்துவர் இராமதாஸின் தலைமையேற்று தங்களது உழைப்பை செலுத்தி ஏழை எளிய பாட்டாளி மக்களின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபடுவோம் என உறுதியேற்றுக் கொண்டார்கள். இதன்போது சொக்கலிங்கம் மாவட்ட துணைத் தலைவர் அவர்கள் மற்றும் ஓசூர் தெற்கு நகர பாமக பொறுப்பாளர்கள் ஈஸ்வரன் நகர செயலர், வன்னியர் சங்க நகர தலைவர் கோவிந்தன், நகர துணைத்தலைவர் பாபு உள்ளிட்ட பாமகவினர் மற்றும் ஓசூர் பாட்டாளி மக்கள் கட்சியினர் அவர்களை வரவேற்று வாழ்த்தினர். 

இதனைப்போன்று, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தண்டராம்பட்டு அல்லப்பனூர் திமுக கிளைசெயலாளர் ஞானவேல், கிளைதலைவர் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோர் பாமக மாவட்ட செயலாளர் அ.வே. பிரசாத் முன்னனிலையில் பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்தனர். மேலும், இது முதற்கட்டமானது மட்டும் தான். எங்களின் மருத்துவர் அய்யா அறிவித்தது போல மாபெரும் வெற்றியை தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பெற கடுமையாக உழைப்போம் என்றும், இன்னும் சில நாட்களில் திமுகவில் உள்ள வன்னியர்கள் பெரும்பாலானோர் பாமகவில் இணைவார்கள் என்றும் பாட்டாளி மக்கள் கட்சியினர் கருத்து தெரிவிக்கின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Krishnagiri Hosur and Tiruvannamalai DMK Supporters Join PMK


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->