தண்ணீர் என நினைத்து, சாராயம் குடித்த 15 ஆடுகள் பரிதாப பலி.!! கிருஷ்ணகிரியில் பரிதாபம்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் தென்பட்டதை அடுத்து, ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு அதிரடியாக அமலானது. இதனால் அத்தியாவசிய கடைகளை தவிர்த்து, பிற கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. கரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்ததால், ஊரடங்கு உத்தரவு மே மாதம் 3 வரை நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டது. 

இந்த நேரத்தில், மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருப்பதால் குடிமகன்கள் மது அருந்த இயலாது திணறி வந்தனர். மேலும், சிலர் மதுபானத்திற்கு மாற்றாக சானிடைசர் போன்றவற்றை அருந்தி பரிதாபமாக உயிரிழந்தனர். சிலர் தற்கொலையும் செய்து கொண்டனர். 

இந்த நிலையில், பல்வேறு இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது தொடர்பான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மேலேறிக்கொட்டாய் மலைப்பகுதியில் சாராய உரல் வைக்கப்பட்டு இருந்துள்ளது. 

இங்கு மேய்ச்சலுக்கு வந்த பெருமாள் என்பவரின் ஆடுகள், சாராயத்தை தண்ணீர் என்று அருந்திய நிலையில், 15 மாடுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. மேலும், சாராயம் காய்ச்சிய பின்னர் உரலில் உள்ள நீரை விட்டுச்சென்றது தெரியவந்துள்ளது. இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

krishnagiri goat drink methanol water and died


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->