அதிமுக எம் எல் ஏக்களை வறுத்தெடுத்த கேபி முனுசாமி.! பரபரப்பு பேட்டி.!  - Seithipunal
Seithipunal


கேபி முனுசாமி இன்று செய்தியாளர்களிடம், " ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுகவை ஒன்றாக இணைத்து, பொதுக்குழுவை கூட்டி இரட்டை தலைமை முடிவு செய்யப்பட்டு சிறப்பாக தான் இருவரும் செயல்பட்டு வருகின்றனர். அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என கருத்து தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு ராஜன்செல்லப்பா கூறியிருப்பது சரியானதல்ல. இதனை குன்னம் எம்எல்ஏ ராமச்சந்திரன் வரவேற்று இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது தலைமைக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. இது போன்ற கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோன்ற விஷயங்களை பொதுவெளியில் பேசுவது மிகவும் கண்டிக்கத்தக்க விஷயம்.

பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தோற்று பல சோதனைகளை தாங்கி இருக்கிறது. அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு இந்த ஆட்சியை காப்பாற்ற பாடுபட்டு வருகிறோம். இது போன்ற கருத்துக்களால் எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும் வாய்ப்பை சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் விதமாக இது அமைகிறது.

இது போன்ற கருத்துக்களால் சசிகலா அதிமுகவிற்கு தலைவராக வரவேண்டும் என சிலர் பேசி வருகின்றனர். மந்திரி சபையில் அதிமுக இடம் பெறுவது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்" என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kp munusamy speech


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->