முக்கிய அறிவிப்பை வெளியிட்ட துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம்.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் கொரோனா தொற்று அதிகரிக்க காரணமாக கூறப்படும் கோயம்பேடு சந்தை கடந்த சில மாதங்களாக மூடப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தை வியாபாரிகள் மூலமாகவே மற்ற வியாபாரிகள், பொதுமக்கள், காய்கறி இறக்குமதி செய்ய வந்தவர்கள் என பன்மடங்காக கொரோனா தொற்று பரவியது. 

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கோயம்பேடு சந்தை கடந்த 5ம் தேதி மூடப்பட்டது. சந்தை மூடப்பட்டு திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தை தொடங்கப்பட்டது. அதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு கோயம்பேடு மார்க்கெட் திறக்க, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தமிழக முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்தார். 

அதையடுத்து, கோயம்பேடு காய்கறி சந்தை விரைவில் திறப்பது தொடர்பாக சிஎம்டிஏ உறுப்பினர் உறுப்பினர் செயலர் கார்த்திகேயன் நேற்று முன் தினம் ஆய்வு செய்தார். 

கோயம்பேடு சந்தை திறப்பது குறித்து துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் நேற்று காலை சென்று ஆய்வு செய்தார். அத்துடன் மதியம் 12 மணிக்கு வணிகர் சங்க நிர்வாகிகளுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினர். 

அதையடுத்து, கோயம்பேடு காய்கறிச் சந்தை செப்டம்பர் 28ஆம் தேதி திறக்கப்படும் என்றும் உணவு தானிய மொத்த விற்பனை அங்காடி செப்டம்பர் 18ம் தேதி திறக்கப்படும் என்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். கோயம்பேடு சந்தைக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டு, பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

koyambedu market reopen for sep 28


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->