நெஞ்சில் இடியே பாய்ந்தார் போல இருந்தது.. நீதி கிடைக்கும் வரை ஓய மாட்டேன்.. கவுசல்யா சூளுரை..!! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையை சேர்ந்த சங்கர் என்பவரை, கடந்த 2016 ஆம் ஆண்டு கவுசல்யா தனது பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார். எனவே, கவுசல்யாவின் கணவர் சங்கரை பேருந்து நிலையத்திற்கு அருகில் வைத்து வெட்டிக் கொலை செய்தனர். இதை கவுசல்யா வெட்டு காயத்துடன் தப்பினார். 

ஆனால், காயங்களுடன் உயிர்த்தப்பிய கவுசல்யா, கணவரை இழந்ததனால் அவரது கொலைக்கு காரணமான தனது உறவினர் மற்றும் தந்தைக்கு தண்டனையும் வாங்கிக் கொடுக்க முடிவு செய்து காவல் நிலையத்தில் புகார் அளித்து, நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். 

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், கடந்த 2017 ஆம் வருடத்தில் இவ்வழக்கில் குற்றவாளிகளான கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி உள்ளிட்ட எட்டு பேரும் குற்றவாளிகள் எனவும், தாயார் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை மற்றும் பிரசன்னா ஆகியோரை விடுதலை செய்தும் தீர்ப்பு வழங்கினார். மீதமுள்ள ஆறுபேருக்கு தூக்கு தணடனையும் விதித்து உத்தரவிட்டார்.

கவுசல்யாவை சில வருடங்கள் கழித்து பறையிசை குழுவுடன் சேர்ந்து தனது வாழ்க்கையை மாற்றி கட்டமைத்துக்கொண்டார். மேலும், பல பரபரப்பு பெட்டிகளும் கொடுத்த நிலையில், உயிராக காதலித்த காதல் கணவரை இழந்து, பறையிசை குழு சக்தி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்தார். ஆனால் திருமணத்திற்கு பின்னர் சக்தி தொடர்பான பல தகவல் வெளியானது. 

இந்நிலையில், உடுமலை சங்கர் கொலை வழக்கில், 6 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதிற்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த தீர்ப்பில், கவுசல்யாவின் தந்தை விடுதலை செய்து அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய மீதமுள்ள ஐவரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், குற்றவாளிகளின் விடுதலையை எதிர்த்து காவல் துறை தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த விஷயம் தொடர்பாக கவுசல்யா தெரிவித்த தகவலாவது, எனது சங்கரின் கொலை வழக்கில் சென்னை நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. முதலில் அன்னலட்சுமியும், இப்போது சின்னசாமியும் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பிறரது தண்டனையும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படவுள்ளது.

கொரோனா காலத்தில் இந்த தீர்ப்பு வெளியாக வேண்டுமா?.. சமூகம் முடங்கியுள்ள சூழலில் இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது பல கேள்விகளை எழுப்புகிறது. தமிழக அரசு இந்த வழக்கை போதிய முனைப்புடன் நடத்தியிருக்கலாம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். திருப்பூரில் இவ்வழக்கு நடந்ததற்கும், சென்னையில் இவ்வழக்கு நடந்ததற்கும் பல வேறுபாடுகள் இருப்பது என்னால் உணர இயல்கிறது. 

நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையை நான் இன்றளவும் இழந்துவிடவில்லை. எனது போராட்டத்தினை நான் தொடர்ந்து தொடருவேன். உச்சநீதிமன்றத்திற்கு இவ்வழக்கு தமிழக அரசால் எடுத்து செல்லப்படும் என்று நம்புகிறேன். ஒருபோதும் நான் சோர்வை அடையமாட்டேன். இவ்வழக்கில் சின்னசாமி மற்றும் அன்னலட்சுமி கட்டாயம் தண்டனை பெற வேண்டும். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kowsalya Talks about Sankar case Chennai court judgement


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->