அந்த பல்கலை கழகத்துக்கு கருணாநிதியின் பெயர்.! விரைவில் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகத்திற்கு கருணாநிதி பெயர் வைக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி அமைத்துள்ள திமுக, மறைந்த முதல்வர் கருணாநிதியின் நினைவை போற்றும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக இன்று தமிழக சட்டமன்றத்தில் கருணாநிதியின் உருவப்படம் திறக்கப்பட உள்ளது. இன்று நடக்கவுள்ள தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழாவில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் கருணாநிதியின் புகைப்படத்தை திறந்து வைக்க இருக்கிறார்.

இந்த நிலையில், கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகத்திற்கு கருணாநிதி பெயர் வைக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து, உயர் கல்வித்துறையின் கீழ் ஆலோசனை நடந்து வருகிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் மூன்று பல்கலைக்கழகங்கள் உள்ளன. ஆனால் கருணாநிதி பெயரில் ஒரு பல்கலைக்கழகம் கூட இல்லை. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்துக்கு கருணாநிதியின் பெயரை சூட்டலாம் என்று முடிவு செய்த தமிழக அரசு ஆலோசனை செய்தது.

அதன்படி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்துக்கு கருணாநிதியின் பெயரை வைக்க உயர் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kovai velan university name change


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->