அம்மா ஓட்டல் விலையில், மனைவி ஓட்டல்.. கோவையில் ஓர் அதிசயம்.! - Seithipunal
Seithipunal


கோவை - திருச்சி செல்லும் சாலையில் சிங்காநல்லூரில் அமைந்துள்ள சாந்தி கேண்டீனில் பி.சுப்பிரமணியம் தன்னுடைய மனைவியின் நினைவாக சாந்தி சோஷியல் சர்வீஸஸ் என்னும் பெயரில் நடத்தி வருகிறார். 

இந்த உணவகத்தில் சாப்பிட சென்றால் ஒருத்தருக்கு ரூபாய் 20/- மட்டுமே. எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால் பார்சல் கிடையாது. ஒரு நாளுக்கு மதிய வேளையில் 3000 நபர்களுக்கு சாப்பாடு தயார் செய்து விநியோகிப்பதாக தெரிவித்துள்ளார்கள். தமிழகத்தில் தரமான உணவுகளை இவர்களை போல வேற எந்த உணவாகத்தாலும் தர இயலாது.

ரூ.20-க்கு மட்டும் முழுச் சாப்பாடு, ரூ.5 முதல் ரூ.15-க்கு டிபன் வகைகள், பில்டர் காபி, டீ, ராகி பால், சத்து மாவு பால் என்று எதைத் தேர்ந்தெடுத்து சாப்பிட்டாலும் விலை ரூ.5 தான். நாம் மூன்று வேளையும், கொலைப் பசியில் சாப்பிட்டாலும் பில் நூறு ரூபாய் கூட ஆகாது என்றே சொல்லலாம்.

இதனால், இந்த பகுதியில் வாடகைக்கு வீடு கிடைப்பது அரிது. அங்கு குடியிருப்பவர்கள் அந்த வீடுகளில் சமையல் செய்வதே கிடையாதாம். அது போல ஏழைகள் மற்றும் முதியோர்களுக்கென தனி உணவு விடுதி அங்கு இலவசமாகவே உணவு வழங்குகிறார்.

உணவில் மட்டுமல்லாமல், கல்வி, பெட்ரோல், டீசல், பார்மஸி, டயாலிஸிஸ் சேவை, ரத்த வங்கி சேவை, கண் கண்ணாடி கடை, ரேடியோலஜி சேவை, ஆய்வு மையம், எரிவாயு எரியூட்டு மையம் என்று பல சேவைகளை செய்து வருகிறார்கள். இந்த வளாகத்திலுள்ள மருத்துவ ஆய்வகத்தில் எடுக்கப்படும் ஸ்கேன், எக்ஸ்ரே உள்ளிட்டவை மற்ற மையங்களைவிட, 50 முதல் 70 % கட்டணம் குறைவு.

இந்த அனைத்துப் புகழுக்கும் காரணம் இதன் நிறுவனர் சுப்பிரமணியம். இதுவரை தன்னை எங்கேயும் இவர் அடையாளப்படுத்திக் கொண்டது இல்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kovai to trichy hotel services


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->