மீண்டும் எடப்பாடிக்கு போஸ்டர்.! இந்த முறை என்ன சொல்லிருக்காங்கனு பாருங்க.! - Seithipunal
Seithipunal


கோவை மாணவர்கள் தமிழக முதல்வருக்கு மனித கடவுளே எங்கள் ஓட்டு உங்களுக்குத்தான் என்று நன்றி பதாகை வைத்துள்ளனர். 

கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் அதிகரித்து வருகின்றது. பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வைரஸை தடுக்க முயற்சித்து வருகின்றது. இந்நிலையில், கல்வி நிலையங்கள் அனைத்தும் தமிழகத்தில் மூடப்பட்டுள்ளன. 

இதனால் தேர்வுகள் அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டன. சில தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளை தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் ரத்து என்று தமிழக அரசு அறிவித்தது. இதனை தொடர்ந்து பல்வேறு இடங்களில் விதவிதமான போஸ்டர்களை ஒட்டி முதல்வர் பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர் மாணவர்கள். 

இதுபோல கோவையில் பல முக்கிய இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருக்கின்றன. அதில் மாணவர்கள் முன்னேற்ற அமைப்பு சார்பில் என்று குறிப்பிடப்பட்டு முதல்வர் எடப்பாடியின் படத்தை அதில் போட்டு மாணவர்களின் மனித கடவுளே எங்கள் ஓட்டு உங்களுக்கு என்று தெரிவித்துள்ளனர். தற்போது இது புகைப்படமாக இணையத்தில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KOVAI STUDENTS POSTER TO edappadi palanisamy


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->