இனி அரசியல் கட்சிகளுக்கு நோ.. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனவால் நேற்று 3,949 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 86,224 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 2,212 பேர் பூரண நலன் பெற்றதை அடுத்து, மொத்த பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 47,749 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 62 பேர் பலியானதை அடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 1,141 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியான பட்டியலில் சென்னையில் ஏற்கனவே 53,762 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று மேலும் 2,167 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 55,969 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல கோவையில் இதுவரை 528 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அரசியல் கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள் பிரநிதிகளும், தொண்டர்களும், பொதுமக்களும் தொடர்ந்து சந்திக்க வருகின்றனர். இதனால் வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவும் சூழ்நிலை தற்போது கோவையில் நிலை வருகிறது. 

ஆகையால் அரசியல் கட்சிகள், அமைப்புகள், இயக்கப் பிரதிநிதிகள் தொண்டர்களையும் , பொதுமக்களை திரட்டி ஓரிடத்தில் கூட்டுவது போன்றவைகளை தவிர்த்திட வேண்டும். இதன் மூலம் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியும் என மாவட்ட ஆட்சியர் ராசாமணி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kovai district collector new announcement


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->