கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு : 1500 க்கு மேற்பட்ட வீடுகளில் புகுந்த வெள்ள நீர்.! - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் கொள்ளிட கரையை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கொள்ளிடம் கரையோரம் உள்ள கிராமங்களான திட்டுக்காட்டூர், கீழ குண்டலபாடி, அக்கறை ஜெயங்கொண்ட பட்டினம், கீழ திருக்கழிப்பாளை, சின்ன காரமேடு, வீரன் கோயில் திட்டு மற்றும் ஏருக்கன் காட்டுப் படுகை போன்ற பகுதியில் 1500 க்கு மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது.

இதனால் அப்பகுதி மக்கள் புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்ட மல்லி, மரவள்ளிக்கிழங்கு, பருத்தி, சோளம், கத்திரிக்காய் உள்ளிட்ட பயிறு வகைகள் வெள்ள நீரில் மூழ்கி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kollidam river floods in kolliradam near villages


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->