கட்சி மாறிய ஆறுகுட்டியால் கொடநாடு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றமா? - Seithipunal
Seithipunal


கொடநாடு வழக்கின் முக்கிய சாட்சியான முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி சில தினங்களுக்கு முன்பு திமுகவில் இணைந்தார்!

தமிழகத்தையே உலுக்கிய கொடநாடு கொலை கொள்ளை வழக்கானது தற்பொழுது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த உத்தரவினை தமிழக டிஜிபி தற்போது பிறப்பித்துள்ளார். அதிமுக ஆட்சியில் இருந்து விசாரிக்கப்படும் இந்த வழக்கானது தற்பொழுது திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து அதிதீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் ஐந்து தடைப்படையில் அமைத்து தினமும் விசாரிக்கப்படுகிறது. கோவை, சென்னை, சேலம் உட்பட பல மாவட்டங்களில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். கடந்த ஆட்சியில் விசாரணை செய்யாத புது சாட்சிகளிடம் தற்பொழுது விசாரணை செய்து புதிய உச்சத்தை எட்டி உள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட விசாரணையில் முக்கிய நபர்களை குற்றவாளிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்து இருந்தனர். இதன் காரணமாக கொடநாடு கொலை கொள்ளை வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு இருக்கலாம் என ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

இந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதால் இன்றிலிருந்து விசாரணை தொடங்க வாய்ப்பு உள்ளது. மேலும் சிபிசிஐடி சார்பில் புதிதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும். மேலும் மேற்கு மண்டல ஐஜி தலைமையிலான தனிப்படைகள் விசாரித்த சேகரித்த அனைத்து ஆவணங்களும் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்படும். 

இந்த வழக்கை பொருத்தவரை கொடநாட்டில் நடைபெற்ற கொலை கொள்ளை வழக்கைத் தவிர சேலம் ஆத்தூரில் நடைபெற்ற இதர வழக்குகளும் சேர்த்து சிபிசிஐடி விசாரணை மேற்கொள்ளும். காவல்துறை சார்பில் சுமார் 500க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த வழக்கிற்கான சிறப்பு சிபிசிஐடி அதிகாரி இன்று அல்லது நாளை காலைக்குள் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த முன்னாள் அதிமுக எம்எல்ஏ ஆறு குட்டி சில தினங்களுக்கு முன்பு ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவர் அணி மாறியதும் தற்பொழுது கொடநாடு கொலை கொள்ளை வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kodanadu case transferred to CBCID


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->