இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்த முதல்வர் - அதிரடி மாற்றம் காணப்போகும் மாநிலம் : இந்தியாவிற்கே முன்மாதிரியான திட்டம்..! - Seithipunal
Seithipunal


புதிய கேரளத்தின் மிகப்பெரும் பயனாளிகளாக இளைஞர்கள் இருக்க வேண்டும். அதற்குதேவையான மாற்றங்கள் அனைத்து துறைகளிலும் கொண்டுவரப்படுவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.

கேரள மறு கட்டமைப்பு மற்றும்மறு முதலீடு குறித்து திருவனந்தபுரத்தில் நடந்த கருத்தரங்கில் கேரள முதல்வர் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்து மேலும் பேசுகையில், அடிப்படை வசதிகளில்முன்னேற்றம், கல்வித்துறையிலும், சுகாதாரத்திலும், வேளாண்துறையிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

வெளிநாட்டு வேலையை மட்டும் நோக்கமாக கொண்டு முன்னேற சாத்தியப்படாத சூழல் உள்ளதால் வெளிநாடுகளிலிருந்து திரும்பிவருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அந்த நாடுகளில் தொழில்துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி நமது பொருளாதாரத்தை பாதித்துள்ளது. எனவே, மற்றதொழில் வாய்ப்புகளை நாம் கண்டறிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் படித்துவிட்டு வரும் ஒவ்வொரு துறையிலும் பொருத்தமான தொழில் தொடங்கதயாராக வேண்டும்.

அதற்கேற்ப பாடத்திட்டங்களில் காலத்துக்குஏற்ற மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும்.பெருவெள்ளத்துக்குப் பிறகுகூடுதல் கவனம் தேவைப்படுவது அடிப்படை வசதிகள் மேம்பாட்டிலாகும்.

குறிப்பாக சாலை அமைப்பதில், தகர்ந்த சாலைகளைசிறப்பான முறையில் புனரமைப்பதோடு கடற்கரை நெடுஞ்சாலைக்கும், மலைப்பகுதி நெடுஞ்சாலைக்கும் தேவையான பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டது.

வேளாண் துறையில்தான் அதிக ஆய்வுகள் நடத்த வாய்ப்புள்ளது. நமது உற்பத்திகளை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக்கி அவற்றுக்கான சந்தைகளை கண்டறிய வேண்டும்.காய்கறி, பழம், மீன், இறைச்சி போன்றவை பதப்படுத்தி அனுப்ப வேண்டும்.

சுகாதாரத்துறையிலும் அதிக முன்னேற்றம் ஏற்படுத்த உங்களால் முடியும். நாம் சில துறைகளில் தேசிய சராசரியைவிட சிறந்து விளங்குகிறோம்.

அதற்காக, ஊக்கப்படுத்துவதற்கு பதிலாக வரிவிதிப்பு போன்றவற்றில் தண்டிக்கப்படும் நிலையேஉள்ளது. அந்த நிலை மாறவேண்டும்.

பெருவெள்ளம் நமது மாநிலத்தை பெரிய அளவில் பாதித்தது. மறுசீரமைப்புக்கான முக்கிய சவால் வருவாய் பற்றாக்குறையாகும். ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதோடு மாநிலங்களுக்கான வருவாய் குறைந்துவிட்டது.

ஆனால், அதை ஈடுகட்டுவதற்கான உதவிகளை தடுக்கும் நிலைப்பாட்டை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. மலையாளிகள் அதிகமுள்ள நாடுகளிலிருந்து நமக்கு வந்த உதவிகள்தேவையில்லை என்கிற நிலைப்பாட்டை மத்திய அரசு கையாண்டது.

அத்தகு நிலைப்பாடுகள் பணம் ஈட்டுவதற்கான வழிகளையும் நமது புதிய கேரளம் நிர்மாணிப்பதையும் மிகமோசமாக பாதித்துள்ளது என முதல்வர் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kerala cm invites youths for state development


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->