கீழடி விவகாரத்தில் அதிரடி முடிவை அறிவித்த மத்திய அரசு..!  - Seithipunal
Seithipunal


கீழடியில் தொல்லியல் துறை சார்பாக அகழ்வாராய்ச்சியானது நடைபெற்று வருகிறது. இந்த அகழ்வாராய்ச்சியில் தமிழர்களின் நாகரீகம்., பண்பாடு மற்றும் அன்றைய கால பொருட்கள் பல கண்டறியப்பட்டு வருகிறது.

கீழடியில் நடந்த அகழாய்வில் சங்கு வளையல், பானை ஓடு, வில் அம்பு உருவம் பதித்த பானை ஓடு, சூது பவளம், கழுத்து பதக்கம், 2 இஞ்ச் பானை உள்ளிட்ட 900 பொருட்கள் கண்டறியப்பட்டன. கீழடியில் கண்டறியப்பட்ட பொருட்களை வைத்து தற்காலிகமாக பார்வையாளர்கள் பார்வையிட ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

அதனை கீழடியிலேயே நடத்த வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்த நிலையில் தமிழக தொல்லியல்துறை அக். 23ல் மதுரை திருமலை நாயக்கர் மகாலில் தற்காலிக அருங்காட்சியகம் நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்கு சில எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், கீழடி நாகரீகம் உலக அளவில் பெயர் பெற்றுள்ள நிலையில் பலரும் கீழடியை காண ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர்.

கீழடி,

தற்போதைய நிலையில் இரட்டைச்சுவர், தண்ணீர் தொட்டி, கால்வாய் உள்ளிட்டவற்றை மட்டும் கண்டு செல்கின்றனர். அகழாய்வு பொருட்களை காண வந்த மக்களுக்கு ஏமாற்றமே ஏற்படுகிறது. இந்நிலையில் மதுரையில் மக்களின் பார்வைக்கு வைப்பதற்கு பதிலாக கீழடியிலேயே வைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

இந்த நிலையில்., கீழடி., ஆதிச்சநல்லூர் மற்றும் கொடுமணல்., சிவகளையில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள மத்திய அரசானது அனுமதியை வழங்கியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

keeladi excavation central govt gives permission


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->