பாதிக்கப்பட்ட பெண்களின் புகைப்படத்தை வெளியிட்ட காமுகன்.. அதிர்ச்சியில் காவல்துறை.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் கணேசபுரம் பகுதியை சார்ந்த காசி (வயது 26), தந்தையின் சம்பாத்தியத்தில் உடலை வளர்த்து கேவலமான மற்றும் கொடூரமான எண்ணத்தை கொண்டு இருந்துள்ளான். முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணக்கு துவங்கி, தன்னை சமூக ஆர்வலர் என்று பல்வேறு பொய்களை கூறி பெண்களை ஏமாற்றி வந்துள்ளான். 

சமூக வலைத்தளத்தில் தன்னை சமூக ஆர்வலராகவும், தொழில் அதிபராகும், ரோமியோகவும் அடையாளப்படுத்தி, கோட் சூட் புகைப்படத்துடன் புகைப்படங்களை வெளியிட்டு வந்த காமுகனிடம் சிக்கிய பெண்களை, கவிதைகள் பேசி மனதை கவர்ந்து ஏமாற்றியுள்ளான். சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் இவனிடம் ஏமார்ந்து பல லட்சக்கணக்கான பணத்தை பறிகொடுத்து, காவல் நிலையத்தில் அளித்த புகாருக்கு பின்னர், காசியின் சுயரூபம் பல வெளிவந்தது. 

இவன் குறித்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகி வரும் நிலையில், சுமார் 80 பெண்களை தமிழகம் முழுவதும் காதலித்து ஏமாற்றி வந்தது தெரியவந்துள்ளது. காசியின் மீது 5 பெண்கள் புகார் அளித்த நிலையில், காவல் துறையினர் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர். பெண்களின் வாழ்க்கையை சீரழித்து செல்வந்தராக வளம் வந்த காமுகன் பொள்ளாச்சி பாலியல் பலாத்கார திருநாவுக்கரசு கும்பலை போல செயல்பட்டு வந்துள்ளான். 

இந்த நிலையில், தற்போது மற்றொரு புதிய பிரச்சனை எழுந்துள்ளது. இதில் காமுகன் சரிவர விசாரணைக்கு ஒத்துழைக்காத நிலையில், பெண்கள் தாங்களாக விருப்பப்பட்டு பணத்தை வழங்கியதாகவும் காவல் துறையினரிடம் கூறி வருகிறான். இதனைப்போன்று காமுகனின் மீது புகார் அளித்த பெண்களின் புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகளை காசியின் நண்பன் கவுதம் என்பவன் வெளிநாட்டில் இருந்து சமூக வலைத்தளத்தில் பரப்பியுள்ளான். 

இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில், பெண்கள் மேலும் புகார் அளிக்காத வண்ணம் காமுகன் தரப்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.. இனியும் தாமதம் காட்டாமல் வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தி, காமுகனை தண்டிக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kasi case investigation complaint registered girl photos published social media


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->