மணல் கடத்தலை தடுத்த போலீசுக்கு ஏற்பட்ட சோகம்.! கரூர் அருகே களேபரம்.!  - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டத்தில் குளித்தலை அருகே இருக்கும் பாலக்கோடு காவல் எல்லையின் கீழ் இருக்கும் ஒருபகுதியில் காவல்துறையினர் வாகனசோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்பொழுது அஜய் மற்றும் செந்தில் ஆகிய இருவர் டிராக்டரில் மணல் கடத்தி வந்து இருக்கின்றனர். இதனை அறிந்த உதவி ஆய்வாளர் தங்கவேல் காவல் நிலையத்திற்கு அந்த டிராக்டரை எடுத்துச் செல்லுமாறு அவர்களிடம் தெரிவித்துள்ளனர். 

இருப்பினும், அஜய், செந்தில் ஆகிய இருவரும் டிராக்டரை காவல் நிலையத்திற்கு எடுத்துச் செல்லாமல் வண்டியை வேகமாக நகர்த்தி இருக்கின்றனர். அருகே இருந்த உதவி ஆய்வாளர் தங்கவேல் மற்றும் அவருடைய இரு சக்கர வாகனத்தின் மீது ஏற்றிவிட்டு தப்பிச் சென்று இருக்கின்றனர். இதன் காரணமாக தங்கவேலுக்கு சிறிது காயம் ஏற்பட்டு இருக்கின்றது. மேலும், அவரது வாகனத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கின்றது. 

இதனை தொடர்ந்து கொலை முயற்சி மற்றும் கடத்தல் ஆகிய சில வழக்குகளில் அவர்கள் மீது உதவி ஆய்வாளர் தங்கவேல் புகாரளித்து இருக்கின்றார். இந்த  புகாரின் பேரில் அஜய், செந்தில், நாகமுத்து மற்றும் செல்வம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KARUR POLICE ATTACK BY UNKNOWN PERSONS


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->