அன்று உணவகம், இன்று சத்துணவு பொருட்கள்..! கரூரில் அழுகிய முட்டைகள்., சத்துணவு அமைப்பாளர் சஸ்பெண்ட்.! - Seithipunal
Seithipunal


சத்துணவு முட்டைகளை சரியாக பராமரிக்காத சத்துணவு அமைப்பாளர் பணியிடைநீக்கம் செய்யப்படுவதாக கரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

சத்துணவு திட்டத்தின் மூலமாக குழந்தைகளுக்கு சாப்பாடு மதிய வேளைகளில் பள்ளிகளில் வழங்கப்பட்டு வந்தது. கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், மாணவ - மாணவியர்களுக்கு ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதி செய்யும் பொருட்டு, சத்துணவு வழியாக அவர்களுக்கு அரிசி, பருப்பு, முட்டை போன்ற பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று முட்டை, அரிசி போன்ற பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. இவைகளில் முட்டை கெட்டுப்போய் அழுகி இருந்ததாகவும், முட்டைகளில் புழுக்கள் இருந்ததாகவும் பெற்றோர்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர். 

இதனையடுத்து, இதுகுறித்த தகவல் கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுவு சங்கருக்கு தெரியவரவே, பள்ளிக்கு விரைந்த மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து சோதனை செய்தார். பின்னர், இது தொடர்பாக விசாரணை நடத்திய ஆட்சியர் சத்துணவு பொருட்களை முறையாக பராமரிக்க தவறிய சத்துணவு அமைப்பாளர் ஜெயந்தியை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த விஷயம் தொடர்பாக விளக்கம் அளிக்க ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் துணை அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

நேற்றைய தினத்தில் திருப்பூர் மாநகராட்சிக்கு சொந்தமான பள்ளியில் வழங்கப்பட்ட முட்டைகள் அழுகிய நிலையில் புழுக்கள் வைத்து வழங்கப்பட்ட நிலையில், அங்கு பொறுப்பில் இருந்த சத்துணவு அமைப்பாளரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். மறுநாளிலேயே மற்றொரு மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கெட்டுப்போன பொருட்களை வைத்து தயார் செய்யப்பட்ட உணவை சாப்பிட்ட சிறுமி பலியாக, அதனைத்தொடர்ந்து உணவுப்பாதுகாப்புத்துறையினர் உணவகத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டு வந்தனர். இப்படியான நிலையில், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்கி, அதனை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பில் உள்ள அதிகாரிகளின் அலட்சியத்தால் முட்டைகள் அழுகிப்போய் விநியோகம் செய்யப்படும் பரபரப்பு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karur Goundampatty Child Nutrition Food Egg Rotten Issue Nutrition Organizer Suspended by District Collector


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->