அம்மா உணவகத்தில் தான் வயிற்று பசி போகிறது.. வாடகைக்கு எங்கே செல்ல?.. குடும்பத்தின் கண்ணீர் குமுறல்.!! - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டத்தில் உள்ள தாந்தோணிமலை அருகேயுள்ள சிவசக்தி நகர் பகுதியை சார்ந்தவர் தர்மராஜ். இவரது மனைவி லோகேஸ்வரி. இவர்கள் இருவரும் தங்களின் குழந்தைகளுடன் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகாரளிக்க வந்துள்ளனர். 

இவர்களது புகாரில், கொரோனா ஊரடங்கு துவங்கிய மார்ச் மாதத்தில் தங்களின் உறவினர் வீட்டிற்கு சென்றோம். பின்னர் 16 ஆம் தேதியன்று எங்களது வீட்டிற்கு செல்கையில், வாடகை பணம் கொடுத்தால் மட்டுமே வீட்டிற்குள் நுழைய அனுமதிப்போம் என்று வீட்டின் உரிமையாளர் தெரிவித்துவிட்டார்.

இதன் காரணமாக கடந்த வாரம் முழுவதும் அம்மா உணவகத்தில் எங்களின் வயிற்று பசியை ஆற்றிவிட்டு, உறவினரின் இல்லத்தில் தங்கியிருந்து வருகிறோம். மேலும், வாடகை பணத்தை செலுத்த 2 மாத அவகாசம் வழங்க கூறி வீட்டின் உரிமையாளரிடம் எடுத்துரைக்கும்படியும், இதனை தவிர்த்தால் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்வது தான் வழி என்றும் கூறியுள்ளார்.  

இது குறித்த புகார் மனுவை ஏற்ற மாவட்ட ஆட்சியர், இது குறித்து விசாரணை மேற்கொள்வதாக தெரிவித்த நிலையில், இதனைப்போன்று மகளிர் சுய உதவி குழுவில் வாங்கிய மாத தவணை பணத்தையும் கட்டுமாறு பல அமைப்புகள் வலியுறுத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karur district collector office visited couple cry and say about House Rent


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->