பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இருவருக்கு, ஜாமீன் வழங்கிய கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


கரூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட மருத்துவ ரஜினிகாந்துக்கு, நிபந்தனை ஜாமீன் வழங்கி, மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரூரில் பிரபலமான ஜிசி எலும்பு மூட்டு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்த மருத்துவர் ரஜினிகாந்த் என்பவர், அதே மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த பெண் ஊழியர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

மேலும், அந்த பெண் பணியாளரின் மகள் பதினோராம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கும் பாலியல் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து, அந்த பெண் ஊழியரும், பள்ளி சிறுமியும் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், மருத்துவர் ரஜினிகாந்த் மற்றும் மேலாளர் சரவணன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இதற்கிடையே மருத்துவர் ரஜினிகாந்தும், மேலாளர் சரவணன் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு அளித்திருந்தனர்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, மருத்துவர் ரஜினிகாந்துக்கும், மேலாளர் சரவணனுக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி, மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karur court


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->