8 மாத கர்ப்பிணி மனைவியுடன் தூக்கில் பிணமாக தொங்கிய கணவன்... கரூரில் பேரதிர்ச்சி.. சிக்கிய கடிதம்.! - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டத்தை சார்ந்தவர் பாலமுருகன் (வயது 31). இவர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பெருமாநல்லூர் மீனாட்சி நகரில் தங்கியிருந்து, பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை பகுதியை சார்ந்தவர் கவிதா (வயது 21). இவர்கள் இருவருக்கும் கடந்த இரண்டரை வருடங்களுக்கு முன்னதாக பெற்றோர்களால் நிச்சயம் செய்யப்பட்டு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. 

தற்போது கவிதா 8 மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில், பாலமுருகனின் சகோதரர் கார்த்திகேயன் (வயது 35), தனது மனைவியுடன் பெருமாநல்லூர் பகுதியில் தங்கியிருந்துள்ளனர். இவர்கள் நேற்று இரவு பாலமுருகனை தொடர்பு கொண்டு பேச முயற்சிக்கையில், போனை அவர் எடுக்காமல் இருந்து வந்துள்ளார். நீண்ட நேரம் முயற்சி செய்தும் பலன் இல்லாததால், சந்தேகமடைந்த கார்த்திகேயன் பாலமுருகனின் இல்லத்திற்கு நேரில் சென்றுள்ளார்.

வீட்டின் கதவை திறந்தபோது தம்பதிகள் இருவரும் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளனர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த கார்த்திகேயன், பெருமாநல்லூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், தம்பதியரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில், தம்பதிகள் கைப்பட எழுதப்பட்ட கடிதம் கிடைத்துள்ளது. இது குறித்த கடிதத்தில், " தங்களின் மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை. இது நாங்களாக எடுத்த முடிவு " என்று எழுதப்பட்டு இருந்துள்ளது. கவிதாவின் தந்தை சண்முகம் (வயது 48) மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் அளிக்கவே, இது குறித்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karur Couple Suicide Police Investigation 26 December 2020


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->