மரத்தடியில் பச்சிளம் குழந்தையுடன் தவித்த தம்பதி.. வீட்டு உரிமையாளரின் அட்டூழியம்.. கரூரில் சோகம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளியணை மணவாட்டி பகுதியை சார்ந்தவர் நாகராஜன் (வயது 30). இவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் நடைபெற்று முடிந்து மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், குடும்பத்துடன் அங்குள்ள வாடகை இல்லத்தில் வசித்து வந்துள்ளார். 

கரோனா பரவலின் காரணமாக ஊரடங்கு அமலாகியுள்ள நிலையில், குடும்பத்தின் அன்றாட செலவிற்கு வழிவகை இல்லாமல் தவித்து வந்துள்ளார். இதனால் வீட்டின் வாடகை கொடுக்க இயலாத சூழலும் ஏற்பட்டுள்ள நிலையில், வீட்டின் உரிமையாளர் நாகராஜனிடம் முன்பணமாக ரூ.5 ஆயிரத்தை கொடுக்க வேண்டும் என்றால், வாடகை பாக்கியையும் கொடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார். 

பணம் கொடுக்காத பட்சத்தில்  வீட்டை காலி செய்ய கூறவே, வழிதெரியாமல் தவித்த சூழலில் வீட்டில் இருந்த பொருட்கள் மற்றும் மனைவி, குழந்தைகளுடன் சாலையோரத்தில் அமர்ந்து இருக்கிறார். இந்த தகவலை அறிந்த காவல் துறையினர் நகராஜனிடம் விசாரணை மேற்கொண்டு, வீட்டு உரிமையாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karur corona virus amid police resend home after house owner conversation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->