கள்ளக்காதலால் தாயும், மகளும் சிறைபுறாவாக மாறிய சோகம்.. கணவனை கொன்று, ஊரில் நாடகமாடி சிக்கிய கும்பல்.! - Seithipunal
Seithipunal


வியாபாரி கொலை செய்யப்பட்ட வழக்கில், இரண்டரை வருடங்கள் கழித்து தூத்துக்குடியை சேர்ந்த வியாபாரியின் மனைவி, மாமியார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கரூர் மாவட்டத்தில் உள்ள பசுபதிபாளையம் முடக்குசாலை பகுதியில் கடந்த 2018 ஆம் வருடம் பிப்ரவரி மாதம், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் ஒன்று கிடைத்தது. இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், துப்பு துலங்காத காரணத்தால் வழக்கை கிடப்பில் போட்டுள்ளனர். 

இந்நிலையில், கரூர் நகர டி.எஸ்.பியாக பொறுப்பேற்ற முகேஷ் குமார், இந்த கொலை தொடர்பாக சிறப்பு தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தார். கொலையான இடத்தில் கைப்பற்றப்பட்ட மதுபாட்டிலில் உள்ள பெயர் மற்றும் சீரியல் எண் அடிப்படையில் விசாரிக்கையில், அது கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்பனைக்கு அனுப்பப்பட்ட தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து கொலையான இளைஞர் அந்த பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தில், இளைஞரின் புகைப்படம் அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. விசாரணையில், கொலை செய்யப்பட்ட இளைஞர் திருப்பூர் மாவட்டம் கணபதிபாளையம் பெருமாள்பாளையம் சாலையில் உள்ள கூல்ட்ரிங்ஸ் கடை நடத்தி வியாபாரி சுப்புராஜ் என்பது தெரியவந்தது. 

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி கொப்பம்பட்டி பகுதியை சார்ந்த சுப்புராஜ், அதே ஊரை சேர்ந்த ஜெயலலிதா என்பவரின் மகளான அம்மு என்ற அன்னலட்சுமி என்பவரை திருமணம் செய்து திருப்பூருக்கு வந்து வியாபாரம் செய்து வந்துள்ளார். இவரது சொந்த ஊரில் சென்று விசாரிக்கையில், கணவர் சுப்புராஜ் வெளிநாடு சென்று இருப்பதாக மனைவி அன்னலட்சுமி கூறி இருப்பது தெரியவந்துள்ளது. 

கணவர் காணாமல் போன வேளையில், ஏன் புகார் அளிக்காமல் வெளிநாடு போய் இருப்பதாக சொன்னார்? என்று காவல்துறையினர் விசாரணை செய்கையில் அவர் சிக்கிக் கொண்டுள்ளார். அன்னலட்சுமி கொடுத்த தகவலின் பேரில், கரூரை சேர்ந்த கனகராஜ் என்பவரை காவல்துறையினர் கைது செய்து மேற்கொண்ட விசாரணையில், இது கள்ளக்காதல் காரணமாக நடந்த கொடூரம் என்பது தெரியவந்தது. 

கூல்டிரிங்ஸ் கடை நடத்திவரும் சுப்புராஜின் கடை அருகே காய்கறி கடையில் வேலை பார்த்து வந்த கரூரை சேர்ந்த கனகராஜ் என்பவருக்கும் - சுப்புராஜுக்கும் இடையே நட்பு ஏற்பட்டு உள்ளது. சுப்புராஜ் தனது மனைவி அன்னலட்சுமியை கடையில் விட்டுச் செல்லும்போது, கனகராஜுடன் தவறான தொடர்பு ஏற்பட்டுள்ளது. 

இருவரும் தங்களது காதலுக்கு சுப்புராஜ் இடையூராக இருப்பதாக நினைத்து தீர்த்துக் கட்ட திட்டமிட்டு, கடந்த 2018 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி சுப்புராஜுக்கு மது ஊற்றிக்கொடுத்த கனகராஜ், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்துள்ளார்.  

இந்த சம்பவம் தொடர்பாக அன்னலட்சுமியின் தாய் ஜெயலலிதாவிற்கும் விஷயம் தெரிந்த நிலையில், அவரும் எதுவும் கூறவில்லை. திருப்பூரில் வீட்டை காலி செய்து, காதலனுடன் கரூர் சென்று ஆறு மாதம் குடித்தனம் நடத்திய நிலையில், அவர் 6 மாதத்தில் மற்றொரு பெண்ணை தேடி அன்னலட்சுமியை விரட்டியடித்துள்ளார். 

பின்னர் தாயும் மகளும், குழந்தைகளுடன் பிழைப்பு தேடி சொந்த ஊருக்கே திரும்பியுள்ளனர். ஊராரிடம் கணவர் வெளிநாட்டில் வேலை பார்ப்பதாக சமாளித்து வந்த நிலையில், இந்த சம்பவம் காவல் துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கனகராஜ், அன்னலட்சுமி, ஜெயலலிதா உட்பட மூன்று கூட்டாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். பாதுகாப்பாக இருங்கள்.. 

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், உடலுக்கு குளிர்ச்சியான உணவுகளை, இயற்கையான பழச்சாறுகளை எடுத்துக்கொள்ளுங்கள். உடல்நலத்தை பாதுகாத்திடுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karur Cool Drinks Sales Man Murder case Police Revokes Truth after 2 Yeras 13 April 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->