கரூர் பள்ளி மாணவி தற்கொலை: கொதித்தெழுந்த கல்லூரி மாணவர்கள்.! சாலை மறியல்-போராட்டம்.! - Seithipunal
Seithipunal


கரூரில் கடந்த 19ஆம் தேதி பாலியல் தொல்லை காரணமாக பள்ளி மாணவி ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரின் அந்த தற்கொலை கடிதத்தில், "எனக்கு தொந்தரவு கொடுத்தவர்கள் யார் என்று சொல்வதற்கு பயமாக உள்ளது., நான் வாழ்வதற்கு ஆசை, ஆனால் செல்கிறேன். இந்த பூமியில் வாழ்வதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தால்., நான் அனைவருக்கும் உதவி செய்து வாழ்வேன்" என்று தெரிவித்திருந்தார்.

இந்த கடிதம் மற்றும் அந்த மாணவி தற்கொலை தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் தொடர்ந்து கரூர் பேருந்து நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று காலை முதல் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், அந்த பாலியல் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கரூர் அரசு கல்லூரி மாணவர்கள் 200க்கு மேற்பட்டோர் சுமார் ஒரு மணி நேரம் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கல்லூரி வளாகத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்று, மாவட்ட ஆட்சியரிடம் மணி அளித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karur college students protest for school girl suicide issue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->