கரூர் பாஜக Vs காவல்துறை.. அனுமதியின்றி நடந்த கொண்டாட்டத்தால், கைது நடவடிக்கையில் தள்ளுமுள்ளு.! - Seithipunal
Seithipunal


அனுமதியின்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை காவல்துறை அதிகாரிகள் கலைந்து செல்ல அறிவுறுத்தியதால் பாஜகவினருக்கும் - கரூர் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்த எல்.முருகனுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்ட நிலையில், தமிழக பாஜக தலைவராக யார் பொறுப்பேற்கப்போகிறார்? என்ற பரபரப்பு தமிழக பாஜக அரசியல் வட்டாரத்திடையே நேற்று இரவு வரை நீடித்து இருந்தது. இந்த பரபரப்பை சரிக்கு கொண்டு வரும் பொருட்டு, நேற்று மாலை தமிழக பாஜக தலைவர் நியமனம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.

பாஜகவின் தேசிய தலைவர் ஜெ.பி நட்டா தமிழக பாஜக தலைவராக ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலையை நியமனம் செய்து உத்தரவிட்டார். காவல் பணியில் இருந்து விடுவித்து தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்ட அண்ணாமலை, கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது கட்சிக்காக அயராது உழைத்து வந்த நிலையில், அவருக்கு பாஜகவின் தமிழக மாநில தலைவராக பொறுப்பு வழங்கப்பட்டு அக்கட்சியின் தேசிய தலைமை உத்தரவிட்டது. 

அறிவிப்பு வெளியானதும் பாஜக தொண்டர்கள் மிகுந்த உற்சாகமடைந்த நிலையில், பலரும் தங்களின் வாழ்த்துக்களை நேரடியாகவும், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் அண்ணாமலைக்கு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று அண்ணாமலையின் சொந்த ஊரான கரூர் மாவட்ட பாஜக சார்பில் கரூர் அரசு பேருந்து நிலையத்திற்கு முன்புறம் பாஜக தொண்டர்கள் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் பொருட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் கொண்டாடினர். 

ஆனால், இவர்கள் அனுமதி இல்லாமல் இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் பாஜகவினரை கலைந்து செல்ல அறிவுறுத்தினார். அவர்களை அதனை கேட்காததால் கைது செய்ய முயற்சிக்கவே, கைதாக மறுத்து பாஜகவினர் காவல் துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karur BJP Argue with Police Against Arrest when Celebration Annamalai BJP President TN Announcement


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->