உடல்நிலை சரியில்லை என்று கூறியும் பணிக்கு வர சொல்கிறார்கள் - அங்கன்வாடி ஊழியர் விபரீதம்.! - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டத்தில் உள்ள எஸ்.வெள்ளாளப்பட்டி பகுதியை சார்ந்தவர் சந்தியா (வயது 30). இவர் கரூர் மாவட்டத்தில் உள்ள புலியூர் குளத்துப்பாளையம் அங்கன்வாடி மையத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். 

இந்நிலையில், சம்பவத்தன்று அளவுக்கு அதிகமான காய்ச்சல் மாத்திரைகளை எடுத்துக்கொண்ட சந்தியா, மயக்கமடைந்த நிலையில் வீட்டில் உயிருக்கு போராடியுள்ளார். இவரை மீட்ட உறவினர்கள், கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். 

மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், காவல் துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ய தொடங்கினர். இதன்போது, சந்தியா தற்கொலைக்கு முன்னதாக வாட்ஸப்பில் வீடியோ பதிவு செய்து தனது சக ஊழியர்களுக்கு அனுப்பி வைத்துள்ளது கண்டறியப்பட்டது. 

இது குறித்த வீடியோவில், " என்னை அலுவலகத்திற்கு ரெக்கார்ட் எழுத வர சொல்லுகிறார்கள். என்னால் முடியவில்லை, உட்கார்ந்து என்னால் எழுத முடியாது என்று கூறியதும், வெளியே களப்பணிக்கு அனுப்பி சர்வே எடுக்க சொல்லி அசிங்கப்படுத்துகிறார்கள். 

வேலைக்கு வரவில்லை என்றால் ஊதியம் வழங்க முடியாது என்றும் கூறுகிறார்கள். எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். எனக்கு உடல்நிலை சரியில்லை. எனது உடல்நிலையை சொல்லி பணிக்கு வர முடியாது என்று கூறியது தவறா?. நான் மன உளைச்சலால் இம்முடிவை எடுக்கிறேன் " என்று கூறி இருக்கிறார். இது தொடர்பான வீடியோ ஆதாரத்தின் பேரில் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karur Anganwadi Center Govt Employee Suicide Attempt


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->