கரூர் மினி கிளினிக் திறப்பு விழா சுவர் இடிந்து விபத்திற்குள்ளான சம்பவம் - டிடிவி தினகரன் கோரிக்கை.! - Seithipunal
Seithipunal


பழைய கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் மினி கிளினிக் திறப்பு விழாவின் போது, கைப்பிடி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளதில் குழந்தைகள் காயமடைந்துள்ள நிலையில், தரமில்லாத பணிகளை மேற்கொண்டது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்று டிடிவி தினகரன் கோரிக்கை வைத்துள்ளது. 

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பதிவு செய்துள்ள ட்விட்டர் பதிவில், " கரூர் மாவட்டம் கொசூரில் பழைய கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் மினி கிளினிக் திறப்பு விழாவின் போதே, அங்கு புதிதாக கட்டப்பட்ட கைப்பிடி சுவர் இடிந்து விழுந்து இரு குழந்தைகள் காயமடைந்துள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

இந்தளவுக்கு தரமில்லாத கட்டுமான பணிகளை மேற்கொள்ள அனுமதித்தது யார்? அதனைச் சோதித்து பார்க்காமல் திறப்பு விழா நடத்தப்பட்டது ஏன்? என்பது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இத்தகைய தரமில்லாத கட்டுமானத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கேட்டுக் கொள்கிறேன் " என்று தெரிவித்துள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karur Amma Mini Clinic Accident Issue TTV Request to Investigation about TN Govt


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->