தேர்தல் பிரச்சாரத்தில் சீரியல் பற்றி மக்களிடம் பேசிய கார்த்திக் சிதம்பரம்!! மூக்கை உடைத்த பொதுமொக்கள்!! - Seithipunal
Seithipunal



பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், வரும் மக்களவை தேர்தலுக்காக அணைத்து கட்சியினரும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி தமிழகமே எதிர்பார்க்கும் தொகுதியாக அமைந்துள்ளது. சிவகங்கை தொகுதியில் இரண்டு தேசிய கட்சிகளும் நேருக்கு நேர் மோதுகிறது. சிவகங்கை தொகுதியில் ஏற்கனவே பல முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், இந்தியாவின் நிதியமைச்சராகவும் இருந்த ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் போட்டியிடுகிறார்.

சிவங்கங்கை நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக எச்.ராஜா போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் பலமுறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ப.சிதம்பரம் அந்த தொகுதி மக்களை நேரில் சென்று கூட பார்த்ததில்லை என கூறுகின்றனர் அப்பகுதி மக்கள். இதனாலேயே காங்கிரஸ் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். மேலும் அந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் மீது சமீபத்தில் சொத்துகுவிப்பு வழக்கும் பாய்ந்தது. 

இந்தநிலையில், சிவகங்கை தொகுதியில் எச். ராஜாவிற்கு அமோக வரவேற்பு உள்ளது. மேலும் அதிமுக, பாமக, தேமுதிக என மெகா கூட்டணியாக இருப்பதால் வெற்றி பிஜகவிற்கே தான் என அந்த தொகுதி மக்கள் கூறுகின்றனர். இந்தநிலையில், சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மக்கள் முன்னிலையில் பேசிய காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், பெண்களை பார்த்து அனைவரும் விரும்பி பார்க்கும் தொலைக்காட்சி நாடகம் லகஷ்மி ஸ்டோர்ஸா அல்லது கல்யான வீடா..?? என்று கேள்வி கேட்டார். அவர் கேட்ட இரண்டு சீரியலும் அவர்களது கூட்டணி கட்சியான திமுகவின் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் கேட்ட கேள்விக்கு  உடனே பதிலளித்த மக்கள் அனைவரும் ’செம்பருத்தி’ என்று பதில் கூறினார். அந்த தொடர் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர் என்பதால் கார்த்திக் சிதம்பரம் தடுமாறினார். பிறகு வேறு வழியின்றி எதோ ஒன்று பேசி மழுப்பினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karthik sidhambaram talk about serial in election canvas


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->