கர்நாடகத்திடம் ஏன் கையேந்த வேண்டும்..? ஒகேனக்கலில் ஒரு அணை போதும் - அண்டைமாநிலங்களை கதறடிக்கும் காமராஜர் போட்ட திட்டம்.! - Seithipunal
Seithipunal


காவிரி ஆற்றில் மேகதாது என்ற இடத்தில் கர்நாடகஅரசு அணை கட்ட முடிவெடுத்திருந்த நிலையில், மத்திய அரசின் மாசுக் கட்டுப்பாடு வாரியம், இதற்கான முதல்கட்ட அனுமதியை வழங்கியிருக்கிறது.

அங்கே அணை கட்டினால் தமிழகத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று ஏற்கனவே தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு தமிழக அளவில் கொந்தளிப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

கடந்த ஜூலை மாதம் முதல் இன்று வரை மேகதாது அணை கட்டுவது தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை கர்நாடக முதல்வர் குமாரசாமியும், நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சிவசங்கரும் குறைந்தது 5 முறையாவது சந்தித்துப் பேசியுள்ளனர்.

ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும் மேகதாதுவில் அணை கட்ட உரிய அனுமதிகளைப் பெற்றுத் தருவதாக கர்நாடக ஆட்சியாளர்களுக்கு கட்கரி வாக்குறுதி அளித்திருந்தார்.

அதனடிப்படையில் தான் இப்போது மேகதாது அணை கட்டுவதற்கான முதல் கட்ட ஆய்வுகளை மேற்கொள்ள மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அனுமதி அளித்திருக்கிறது.

மேகதாது அணை கட்டுவதற்கான ஆய்வுகளுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கும் என்பது சில மாதங்களாகவே எதிர்பார்க்கப்பட்டது தான். அதற்கான சமிக்ஞைகளை மத்திய அரசு தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தது.

ஆனால், தமிழக அரசு உறங்கியதால் தான் இப்போது கர்நாடகத்துக்கு அணை கட்ட அனுமதி கிடைத்துள்ளது. மேட்டூர் அணை கொள்ளளவை விட கிட்டத்தட்ட இரு மடங்கு தண்ணீரை கர்நாடகம் தேக்கி வைத்தால் தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்காது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகம் சமதளப்பகுதியாக இருப்பதால் அவர்களால் அணைகள் கட்டமுடியாது. அதனால் தான் நாங்கள் மேகதாதுவில் அணைக் கட்ட முடிவு செய்துள்ளோம்.

அதில் தண்ணீரைத் தேக்கி தமிழகத்துக்கு தரத் தயாராக  இருக்கிறோம் என்று தவறான தகவலை மத்திய அரசிடம் தெரிவித்தார் கர்நாடக முதல்வர்.

அவர்கள் என்ன நமக்கு கொடுப்பது, ஒகேனக்கலில் இருந்து வெறும் 18 கி.மீ. தூரத்தில் ராசிமணல் என்கிற இடத்தில் அணை கட்டுவதற்கு காமராஜர் அடிக்கல் நாட்டியுள்ளார்.

இப்போதைக்கு அங்கே அணைகட்டுவதற்கு  மட்டும் கர்நாடக அரசு ஒத்துழைப்பு தர வேண்டும் அவ்வளவு தான்.

உண்மையில் காவிரியின் குறுக்கே தமிழகப் பகுதியில் தாராளமாக அணை கட்டலாம். சட்டப்படி அதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஒத்துழைப்பு மட்டும்தான் கர்நாடக அரசு தரவேண்டும். இதற்கான அனுமதியை முறைப்படி மத்திய அரசு கொடுத்தால் போதுமானது. அதை செய்யுமா என்பது தான் சந்தேகம்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karnataka's new dam project will destroy delta


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->