சத்தியமங்கலம் - கர்நாடக எல்லையில் அதிகாரிகள் கறார்.. தமிழக வாகனம், பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு.! - Seithipunal
Seithipunal


கொரோனா வைரஸ் காரணமாக தடைபட்டு இருந்து தமிழக - கர்நாடக பொதுப்போக்குவரத்து சேவை, கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு பின்னர் கடந்த 23 ஆம் தேதி சீராகியது. இருமாநில அரசுகளும் பொதுப்போக்குவரத்து சேவையை தொடங்க அனுமதி வழங்கியது.

தமிழகத்தின் சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி, திம்பம், ஆசனூர், புளிஞ்சூர் வழியாக கர்நாடகத்தின் சாம்ராஜ்நகர், மைசூர், பெங்களூர் நகரங்களுக்கு பேருந்து சேவைகள் தொடங்கியது. கேர்மாளம் வழியாக கர்நாடகத்தின் உடையார்பாளையம், கொள்ளேகால், மைசூர் வழியாக பொதுப்போக்குவரத்து தொடங்கியுள்ளது. இந்நிலயில், நேற்று காலை திடீரென சத்தியமங்கலத்தில் இருந்து கொள்ளேகால் வழியாக செல்லும் பேருந்துகள் கேர்மாளம் சோதனை சாவடி அருகே நிறுத்தப்பட்டது. 

கர்நாடக எல்லையில் இருக்கும் அர்த்நாரிபுரம் கிராமத்தில் கர்நாடக சோதனை சாவடி அதிகாரிகள், அவ்வழியாக வரும் பயணிகளை கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது இரண்டு டோஸ் தடுப்பூசி போன்றவற்றை கேட்டுள்ளனர். அந்த வாகனங்கள் இருந்தால் மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் இருந்து வரும் பேருந்துகளும் நான்கு கிலோமீட்டர் முன்னதாகவே நிறுத்தப்பட்டு, பயணிகளை இறக்கிவிட்டு சென்றுவிட வேண்டும் என கர்நாடக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மேலும், சோதனை சாவடி அருகே தமிழக வாகனம் வந்தால் அவை பறிமுதல் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் பேருந்து மற்றும் ஆட்டோவில் எல்லைக்கு செல்லும் மக்கள், அங்கிருந்து நான்கு கிலோமீட்டர் அடர் வனப்பகுதியில் அச்சத்துடன் பயணம் செய்கின்றனர்.

கர்நாடக சோதனை சாவடியில் இருக்கும் அதிகாரிகள் மக்களிடம் கொரோனா சான்றிதழ், தடுப்பூசி போன்றவற்றை கேட்டு அவை இல்லாதவர்களை விரட்டியடிப்பதாகவும் கூறப்படுகிறது. எவ்விதமான அறிவிப்புகளும் இன்றி திடீரென கர்நாடக அதிகாரிகள் இதுபோன்ற நடவடிக்கை எடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர். இருமாநில அரசுகளும் பேசி பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka Intra state Connect Sathyamangalam Check Post KA Officers Want Certificate form came Tamilnadu


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->