#Breaking: பணமோசடி வழக்கில் ஹரி நாடாரை தூக்கியது பெங்களூர் காவல்துறை.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரை சார்ந்தவர் வெங்கட்ரமணி. இவர் பெரிய அளவிலான தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தொழில் விஷயமாக கடந்த தேவைப்பட்ட நிலையில், ஹரி நாடாரை இதற்காக அணுகியுள்ளார். 

ஹரி நாடார் ரூ.360 கோடி கடன் தருவதாக ஒப்புக்கொண்ட நிலையில், ரூ.7.20 கோடி முன்பணமாக வேண்டும் என்று கேட்டுள்ளார். இதனை நம்பிய வெங்கட்ரமணியும் ஹரி நாடாரை சந்தித்து ரூ.7.20 கோடி கொடுத்துள்ளார். 

பணத்தை பெற்றுக்கொண்ட ஹரி நாடார் ரூ.360 கோடி கடன் கொடுக்காமல் ஏமாற்றி வந்த நிலையில், இந்த விஷயம் தொடர்பாக வெங்கட்ரமணி பெங்களூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பெங்களூர் காவல் துறையினர் ஹரி நாடாரை கைது செய்தனர். 

தேர்தலில் நின்ற பனங்காட்டுப்படை தலைவர் ஹரி நாடார் நடமாடும் நகைக்கடைபோல பகட்டாக வளம் வந்து, தற்போது படம் ஒன்றிலும் நடித்து வரும் நிலையில், மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka Bangalore Police Arrest Hari Nadar Money Cheating Case 5 May 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->