மிசா விவகாரத்தில் ஸ்டாலினுக்கு மேலும் பின்னடைவு! சிட்டிபாபு குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!  - Seithipunal
Seithipunal


திமுக தலைவர் மு க ஸ்டாலின் அண்மைக்காலமாக இரண்டு விவகாரங்களிலும் சிக்கித் தவித்து வருகிறார். முதல் விஷயம் அவர் மிசா கைதி இல்லை என்று சமூக வலைதளங்கள் வெளியான ஒரு தகவல் மற்றொன்று பாமக நிறுவனர் ராமதாஸ் வெளி உலகுக்கு சொல்லியே திமுகவின் பத்திரிக்கையான முரசொலி பஞ்சமி நிலம் என்ற தகவலும் பூதாகரமாக வெடிக்கிறது. 

இந்த நிலையில் அவர் மிசா கைதியா? இல்லையா என்பது ஒருபக்கம் விவாதம் நடத்தி வரும் நிலையில், தற்போது மிசா கைதியாக இருந்த போது உடனிருந்த சிட்டிபாபு என்ன ஆனார் என்பது குறித்து முன்னாள் சென்னை பொறுப்பு மேயர் கராத்தே தியாகராஜன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் வெளியிட்ட அறிக்கை ஆனது ஸ்டாலினுக்கு மேலும் பின்னடைவை கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது. 

அந்த அறிக்கையானது "திமுக தலைவர் அண்ணன் ஸ்டாலின் மிசா கைது பற்றிய சர்ச்சைகளும் சமூக வலைத்தளங்களில் உலவுகின்றன. அவசர நிலை காலத்தில் அண்ணன் ஸ்டாலினும் பிற தலைவர்களை போல கைது செய்யப்பட்டார்.  அவரை சென்னை மத்திய சிறைச்சாலையில் சிறைக்காவலர்கள் கடுமையாகத் தாக்கியதோடு முன்னாள் மேயர் சிட்டிபாபு அவரை பாதுகாத்து அண்ணன் ஸ்டாலின் மீது நடத்திய தாக்குதலில் எல்லாம் தாங்கிக்கொண்டு அவர் உயிரைக் காப்பாற்றினார். 

இந்த தாக்குதலால் தான் சிட்டிபாபு பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். சிட்டிபாபு தான் என் மகன் ஸ்டாலினை காப்பாற்றினார் என்று பலமுறை கலைஞரே மேடைகளில் பேசி இருக்கிறார். ஸ்டாலின் உயிரை காப்பாற்றிய சிட்டிபாபு குடும்பத்தாருக்கு அண்ணன் ஸ்டாலின் செய்த கைமாறு என்ன? 

காலஞ்சென்ற சிட்டிபாபு மூத்த மகன் சேகர் ஒவ்வொரு முறையும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்ட போது அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. கடைசியில் அலுத்துப்போய் திமுகவே வேண்டாம் என்று அமெரிக்காவுக்கு போய் விட்டார். சிட்டிபாபுவின் இளைய மகன் சுகுமாரை 1996 முதல் 2001 ஆம் ஆண்டு வரை சென்னை மேயராக இருந்தபோது தனக்கு உதவியாளராக வைத்துக் கொண்டார் அண்ணன் ஸ்டாலின். பின்னர் துணை முதல்வராக இருந்த போது சுகுமாரை பணி மாற்ற அடிப்படையில் தனது உதவியாளராக வைத்துக்கொண்டார். அவ்வளவுதான்.. 

ஆனால் இன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி பரிந்துரையின் பேரில் சிட்டிபாபு மகன் சுகுமாருக்கு சென்னை மாநகராட்சி ஆணையருக்கு அடுத்த உயர் பதவியான வருவாய்துறை அதிகாரி வழங்கி பேரறிஞர் அண்ணாவின் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்ற கொள்கையை நிலை நிலைநிறுத்தியிருக்கிறது அண்ணன் எடப்பாடி அரசு. 

அண்ணன் சிட்டிபாபு மூத்த மகன் சேகர் என் கல்லூரி தோழர் அவரது குடும்பத்தை எனக்கு பல ஆண்டுகளாக தெரியும். பாரம்பரியமிக்க திராவிடக் குடும்பத்தின் இன்றைய நிலை என்னை வருத்தப்பட செய்து இந்த அறிக்கையை வெளியிட கட்டாயத்துக்கு தள்ளிவிட்டதில் உண்மையில் வருந்துகிறேன்" என் கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார். 

ஸ்டாலினின் குடும்பத்தினர் கட்சியில் பல பொறுப்புகளை வகிக்க, ஸ்டாலினுக்காக உயிரைவிட்ட சிட்டிபாபுவின் மகனுக்கு ஒரு எம்எல்ஏ சீட் கூட கிடைக்காமல் ஏமாற்றப்பட்டார் என்பது திமுகவினரை வருத்தப்பட செய்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karate thiyagarajan about stalin misa life


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->