மனைவியின் மீது சந்தேக பேய்.. உயிருடன் கொழுத்த முயன்ற கொடூரன்.. சுதாரித்த அக்கம் பக்கத்தால், தப்பிய பெண்மணி.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் நடுவில் பகுதியை சார்ந்தவர் சுரேஷ் (53 வயது). இவரது மனைவி ஹெப்சி பாய் (வயது 40). இவர்கள் இருவருக்கும் கடந்த 15 வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் குழந்தை இல்லை. 

இந்த நிலையில், கடந்த 2 ஆம் தேதி இரணியல் நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராக அரசு பணியில் சேர்ந்த மனைவி வீட்டிற்குள் வந்ததும், கதவை உட்புறமாக தாழிட்டு வெளியில் என்ன நடந்தவை? யாரிடமெல்லாம் பேசினாய்? என்று சந்தேகத்துடன் சைக்கோ போல அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளான். 

இதே சூழல் தொடர்ந்து வந்த நிலையில், சம்பவத்தன்று வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருந்தது. உள்ளே ஹெப்சியின் அலறல் சத்தம் கேட்டது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், கதவை தட்டிய சிறிது நேரத்தில் ஹெப்சியின் சத்தம் அடங்கியுள்ளது.  மேலும், வீட்டில் இருந்து பெட்ரோல் வாடை வீசியது. இதனால் அதிர்ந்துபோன அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

விரைந்த காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்ற நிலையில், கையில் அரிவாள் மற்றும் கத்தியுடன் சுரேஷ் நின்றுள்ளான். எதிரே இருக்கும் நாற்காலியில் உடலில் கயிற்றால் கட்டப்பட்டு ஹெப்சி இருந்துள்ளார். ஹெப்சியை அரிவாளால் வெட்டி உடலை தீவைக்க முயற்சித்த நிலையில், அக்கம் பக்கத்தினரின் சுதாரிப்பால் அவர் காவல் துறையினரின் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

விசாரணையில், துவக்கத்தில் இருந்தே மனைவியின் மீது சந்தேகம் கொண்ட காமுகன், மனைவி நீதிமன்ற பணிக்கு சென்றதும் அதிகரித்துள்ளது. இதனால் மனைவியை பின்தொடர்ந்து நோட்டமிட்டு, கொடுமைப்படுத்தி வந்ததும் அம்பலமானது. சுரேஷ் ராஜன் மீது பல்வேறு வழக்குகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanyakumari wife Torture by Doubt Husband Murder Attempt Police Arrest


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->