அதிமுக - திமுக மோதல் போக்கால் பரபரப்பு.. அமைச்சரின் கார் கொடிக்கம்பி லேசான சேதம்.! - Seithipunal
Seithipunal


திசையன்விளை பகுதியில் திமுக அமைச்சரின் கார் கொடிக்கம்பி அதிமுகவினரால் சேதப்படுத்தப்பட்டது.

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலின் இரண்டாவது கட்ட தேர்தல் அக். 9 ஆம் தேதியான நாளை நடைபெறுகிறது. நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவுபெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை கரைசுத்துப்புதூர் கிராமத்தில் தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு செய்ய திமுகவினர் காவல் துறையினரிடம் அனுமதி பெற்றனர். 

இதனால் அங்கு அமைச்சர் ஐ.பெரியசாமி, கீதாஜீவன் பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதிமுக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரையின் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டது. 

ஒரே ஊரில் வெவ்வேறு பகுதியில் இந்த கூட்டங்கள் நடைபெற்ற நிலையில், ஊரில் அதிமுகவினர் - திமுகவினர் திரண்டு இருந்தனர். இறுதியில், திமுகவினர் முன்னதாகவே தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு செய்து புறப்பட்டு சென்ற நிலையில், அதிமுகவினர் கூட்டம் நடந்து வழியாக சென்றுள்ளனர். 

இதன்போது, திமுகவை சார்ந்த நபர் வாக்குசேகரிப்பு நேரம் முடிந்துவிட்டது, கூட்டத்தை நிறைவு செய்யுங்கள் என்று அதிமுகவினரிடம் கூறியுள்ளார். இதனால் இருதரப்பு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், திசையன்விளை மார்க்கெட் பகுதியில் இருதரப்பு திரண்டுகொள்ள, திமுக நிர்வாகியோருவர் பெண்களிடம் உரக்க பேசி கலைந்து செல்ல கூறியுள்ளார். 

இதனால் பெரும் கொந்தளிப்புக்கு உள்ளாகிய அதிமுகவினர், அவ்வழியாக வந்த அமைச்சர் கீதா ஜீவனின் கார் கொடிக்கம்பியை சேதப்படுத்தினர். இந்த தகவலை அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைய, இருதரப்பும் குவிந்து இருந்ததால் பதற்றமான சூழ்நிலை நிலவியது. காவல் துறையினர் அதிரடியாக களமிறக்கப்பட்டதால் இருதரப்பும் கலைந்து சென்றது. 

இந்த விஷயம் தொடர்பாக திமுக மாணவரணி நல்லகண்ணு என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த திசையன்விளை காவல் துறையினர், அதிமுகவை சார்ந்த 8 பேரின் மீது கொலை முயற்சி உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanyakumari Thisayanvilai AIADMK DMK Clash Dissolved by Police Local body Election 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->