பொய்களை வைத்து மக்களை திசைதிருப்பி வரும் எதிர்க்கட்சிகள் - தமிழக முதல்வர் குற்றச்சாட்டு.! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாகர்கோவிலில் உள்ள செட்டிகுளத்தில் அதிமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இதன்போது, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், " நடைபெறவுள்ள நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் பொன். இராதாகிருஷ்ணன், சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் நாகர்கோவில் எம்.ஆர். காந்தி, குளச்சல் பா.ரமேஷ், தளவாய் சுந்தரம், பத்மநாமபுரம் ஜான் தங்கம், விளவங்கோடு ஜெயசீலன், கிள்ளியூர் ஜூட் தேவ் ஆகியோருக்கு வாக்களிக்க உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். 

அதிமுக தலைமையிலான வெற்றிக்கூட்டணிக்கு வெற்றி வேட்பாளர்களை தந்துள்ளோம். அவர்களுக்கு வாக்குகளை வழங்கி அமோக வெற்றிபெற செய்ய வேண்டும். பொன். இராதாகிருஷ்ணன் ஏற்கனவே இத்தொகுதியில் வெற்றியடைந்தவர். அமைச்சராக இருக்கையில் பல பணிகளை செய்திருக்கிறார். அவருக்கு மற்றொரு வாய்ப்பை கொடுங்கள். கன்னியாகுமரி மாவட்டம் எழுச்சி பெறவும், ஏற்றம் பெறவும் பல திட்டங்கள் பெற்றுக்கொடுத்துள்ளார். 

கடந்த தேர்தல்களின் முடிவுகளாலால் பல திட்டங்கள் இங்கு வரவில்லை என்றாலும், மக்களுக்கான பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் தவறான மற்றும் அவதூறான செய்திகளை மக்களிடையே பரப்பி வருகிறது. மக்கள் எதிர்க்கட்சியின் சூழ்ச்சியில் சிக்க வேண்டாம். பொய்யாய் மூலதனமாக வைத்து எதிர்க்கட்சிகள் செயல்பட்டு வருகிறது. திமுகவின் ஆட்சிக்காலத்தில் மின்வெட்டு பிரச்சனை இருந்தது. இன்று தமிழகம் தான் இந்தியாவிலேயே மின்மிகை மாநிலமாக இருக்கிறது. பல தொழிற்சாலைகள் தமிழகத்திற்கு வந்துள்ளது. மத்திய அரசும் நமக்கு தேவையான உதவிகளை செய்கிறது " என்று பேசினார்.

Tamil online news Today News in Tamil

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanyakumari Tamilnadu Election Campaign TN Election 2021 28 March


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->