போலிச்சாமியாரால் துடிதுடித்த பெண்.. வேதனையிலும் கணவனை காப்பாற்ற பாச போராட்டம்.!! - Seithipunal
Seithipunal


பேய் ஓட்டுவதாக பெண்ணை சித்திரவதை செய்த நிலையில், காவல்துறையினர் பெண்மணியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ள சம்பவம் நடந்துள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செம்பொன்விளை பகுதியைச் சார்ந்தவர் துரைராஜ். இவர் தனது வீட்டிற்கு அருகே உள்ள அய்யர் கோவிலில் அருள்வாக்கு சொல்வதாகக் கூறி, மனநலம் பாதிக்கப்பட்டவர்களை சங்கிலியால் கட்டி வைத்து பிரம்பால் அடிப்பது என்று பேய் ஓட்டுவதாக நடித்து வந்துள்ளார். 

இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை அந்த கோவிலில் இளம்பெண் ஒருவர் சங்கிலியால் கட்டப்பட்டு, உடல் முழுவதும் பிரம்பால் அடிக்கப்பட்டது போல பலத்த காயங்களுடன் அலறும் வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆனது. இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த குளச்சல் காவல் கண்காணிப்பாளர் கணேசன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பெண்ணொருவர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உடலில் காயங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. அந்த பெண் சேவிழை பகுதியைச் சேர்ந்த இராணுவ வீரர் வினோ என்பவரின் மனைவி அஜிதா என்பதும், அவர் எம்.எஸ்.சி., எம்.எட் படித்துள்ள நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்னதாக திடீரென மனநலம் பாதிக்கப்பட்டது. இதனால் கணவர் மற்றும் பெண்ணின் பெற்றோர்கள் பேய் பிடித்து இருக்கலாம் என்று எண்ணி, பெண்ணை போலிச்சாமியார் துரைராஜன் வீட்டிற்கு அழைத்து வந்து இருந்ததும் தெரியவந்தது. 

மேலும், போலிச்சாமியார் துரைராஜ் அவர்களை குடும்பத்தோடு கோவிலில் தங்க வைத்து, பெண்ணை சங்கிலியால் கட்டிப் போட்டு பேய் ஓட்டுவதாக தினமும் பிரம்பால் அடித்து சித்திரவதை செய்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் உங்கள் மனைவியை நீங்கள் எப்படி சங்கிலியால் கட்டி போடலாமா? உங்களை ஒரு நபர் சங்கிலியால் கட்டிப் போட்டால் எப்படி இருக்கும்? அவரை எதற்காக அடித்து துன்புறுத்துகிறார்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். 

ஒரு சமயத்தில் காவல்துறையினர் இராணுவ வீரரை விசாரணைக்கு அழைத்துச் செல்ல முயற்சிக்கவே, குழந்தை போல கணவனை கட்டி பிடித்து அவரை விட்டுவிடுங்கள் என்று கண்ணீர் மல்க மனைவி பாச போராட்டம் நடத்தியது காவல் துறையினரிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதனை வைத்து புத்திமதி தெரிவித்த காவல் அதிகாரிகள், பெண்மணியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும் போலி சாமியாரான துரைராஜ் மீது ஏற்கனவே குளச்சல் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பதாகவும், இதுபோன்ற காரியங்களில் சம்பந்தப்பட்டவர்கள் அல்லது பிற நபர்களின் ஈடுபட வேண்டாம் என்றும், எந்த விதமான சிகிச்சை என்றாலும் மருத்துவமனைக்கு செல்லுமாறும் அல்லது உங்களின் முழு பாசம் கொடுத்து மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை மீட்க வேண்டும் என்றும் காவல் துறையினர் அறிவுறுத்தினர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanyakumari Police Rescue Woman Fake Spiritual Maker and Advice her Family 12 June 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->